ஹூண்டாய் வெர்னா 2026 டீசலுக்கு மிண்டும் நோ
'ஹூண்டாய்' நிறுவனம், 'வெர்னா' மிட் சைடீஸ் செடான் காரை மேம்படுத்தி, 2026 மாடலில் அறிமுகம் செய்துள்ளது. இந்த கார், ஆறு மாடல்களில் கிடைக்கிறது. நீளம் 4.57 மீ உள்ள இந்த கார், இம்முறையும் டீசல் இன்ஜினில் வரவில்லை. அதாவது, 1.5 லிட்டர், 4 சிலிண்டர் என்.ஏ., மற்றும் டர்போ பெட்ரோல் இன்ஜின்கள் வருகின்றன. இரு இன்ஜின்களுக்கும் 6 - ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வரும் நிலையில், மாடலை பொறுத்து, 6 - ஸ்பீடு இ.வி.,டி மற்றும் 7 - ஸ்பீடு டி.சி.டி., ஆட்டோ கியர்பாக்ஸ் கிடைக்கின்றன. புதிய கருப்பு ரேடியேட்டர் கிரில், டூயல் எல்.இ.டி., ஹெட்லைட்டுகள், பம்பர்கள், 16 அங்குல அலாய் சக்கரங்கள், லேதர் சீட்கள் ஆகியவை மேம்படுத்தப்பட்டுள்ளன.