உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி /  இந்தியாவின் சிறந்த கார் 2026 மாருதி விக்டோரிஸ் எஸ்.யூ.வி.,

 இந்தியாவின் சிறந்த கார் 2026 மாருதி விக்டோரிஸ் எஸ்.யூ.வி.,

'மாருதி சுசூகி' நிறுவனம், அண்மையில் அறிமுகப்படுத்தி இருந்த 'விக்டோரிஸ்' எஸ்.யூ.வி., கார், 2026ம் ஆண்டிற்கான நாட்டின் சிறந்த கார் என்ற விருதை பெற்றுள்ளது. டிசைன், தொழில்நுட்பம், வசதி, பாதுகாப்பு, பவர்ட்ரைன் ஆகியவையை அடிப்படையாக கொண்டு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. ஸ்ட்ராங் ஹைபிரிட் பெட்ரோல் மற்றும் சி.என்.ஜி., இன்ஜின்கள், ஆல் வீல் டிரைவ் வசதி, 10 அங்குல டச் ஸ்கிரீன், 8 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், அடாஸ் லெவல் - 2 வசதி, 360 டிகிரி கேமரா உள்ளிட்டவை இந்த காரின் சிறப்பம்சங்கள் ஆகும். 28.65 கி.மீ., மைலேஜ் வழங்கும் இந்த கார், மிட் சைஸ் எஸ்.யூ.வி., பிரிவில் அதிக மைலேஜ் வழங்கும் காராக உருவெடுத்துள்ளது. இன்றைய தலைமுறை வாடிக்கையாளர்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த கார், இந்திய வாடிக்கையாளர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. இந்த விருதை வழங்கிய மதிப்பாய்வு குழுவுக்கு நன்றி. ஹிஷாஷி டக்யுச்சி நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி மாருதி சுசூகி இந்தியா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி