உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி / 100 சி.சி., பைக்குக்கு சவால் விடும் கைனடிக் இ - லுானா பிரைம்

100 சி.சி., பைக்குக்கு சவால் விடும் கைனடிக் இ - லுானா பிரைம்

'கைனடிக் கிரீன்' நிறுவனம், 'இ - லுானா பிரைம்' என்ற மின்சார மொபெட் வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. 100 மற்றும் 110 சி.சி., பெட்ரோல் பைக்குகளுக்கு மாற்றாக, இது அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இந்த வாகனம், 2.3 மற்றும் 3 கி.வாட்.ஹார்., என இரு பேட்டரி வகையில் வந்துள்ளது. இந்த பேட்டரியை தனியாக எடுத்து, சார்ஜ் செய்து கொள்ளலாம். ஒரு சார்ஜில், 110 முதல் 140 கி.மீ., ரேஞ்ச் வழங்குகிறது. முழு சார்ஜ் செய்ய, 4 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது.

மொத்தம், 96 கிலோ எடை உள்ள இந்த வாகனம், 150 கிலோ வரை சுமக்கும் திறன் உடையது. பூட் ஸ்பேஸ் இல்லை என்றாலும், சீட்டுக்கு அடியில், யூ.எஸ்.பி., போர்ட் வாயிலாக போன் சார்ஜ் செய்து கொள்ளலாம். மேலும், 16 அங்குல அலாய் சக்கரங்கள், டியூப்லெஸ் டயர்கள், டிஜிட்டல் டிஸ்ப்ளே, சிறு தொழில் செய்பவர்களுக்கு பொருட்களை வைக்க வசதியாக, அதிக முன்புற இடவசதி, எல்.இ.டி., லைட்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. ஆறு நிறங்களில் கிடைக்கும் இந்த வாகனம், பெட்ரோல் பைக்குடன் ஒப்பிடுகையில், ஆண்டுக்கு 60,000 ரூபாய் சேமிப்பதாக இந்நிறுவனம் கூறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mecca Shivan
அக் 04, 2025 11:58

மின்சாரத்தில் இயங்கும் இரு சக்கர வாகனங்கள் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 100 கிலோமீட்டர் மற்றும் கார்கள் 150 லிருந்து 200 கிலோமீட்டர் வரை ஓட்டினால் மட்டுமே சேமிப்பு கிடைக்கும். இல்லையென்றால் இதன் பாட்டரி விலைக்கு பெட்ரோல் வண்டியே மேல் என்றாகிவிடும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை