மேலும் செய்திகள்
ஐ20 எரா அறிமுகம் விலை ரூ. 74,000 குறைவு
11-Feb-2026
'மஹிந்திரா' நிறுவனம், 'உடோ' என்ற மின்சார பயணியர் ஆட்டோவை அறிமுகம் செய்துள்ளது. 'உடோ' என்றால் ஹிந்தியில் 'பறப்பது' என்று அர்த்தம். அதாவது, விமானத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஆட்டோ வடிவமைக்கப்பட்டுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில், டிரைவர் உட்பட நான்கு பேர் வரை பயணம் மேற்கொள்ளலாம். இந்த ஆட்டோவில், 11.7 கி.வாட்.ஹார்., லித்தியம் அயான் பேட்டரி கிடைக்கிறது. ஒரு சார்ஜில், 200 கி.மீ., வரை ரேஞ்ச் தருகிறது. பேட்டரி, மோட்டார், சார்ஜிங் போர்ட் ஆகியவை ஐ.பி., 67 வாட்டர் ப்ரூப் தரத்தில் வந்துள்ளன. காரை போன்ற வெளிப்புற கட்டமைப்பு, பெரிய வின் ஷீல்டு, டிஜிட்டல் டிஸ்ப்ளே, மூன்று ரைட் மோட்கள், ஹில் ஹோல்டு அசிஸ்ட், கிளவ் பாக்ஸ், பாட்டில் ஹோல்டர், சி - டைப் சார்ஜிங் போர்ட், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, அதிக குஷன் உள்ள சீட்கள், ரிவர்ஸ் த்ராட்டில், க்ரீப் மோட், ரீஜென் பிரேக்கிங் உள்ளிட்ட அம்சங்கள் கிடைக்கின்றன. உத்தரவாதம், 6 ஆண்டுகள் அல்லது 1.5 லட்சம் கி.மீ., வரை வழங்கப்படுகிறது. இந்த ஆட்டோ, 10 லட்சம் கி.மீ., வரை சோதனை செய்யப்பட்டுள்ளது. அறிமுக விலை - ரூ.3.59 லட்சம் மோட்டார் - 11.7 கி.வாட்.ஹாட்., பவர் - 13.4 ஹெச்.பி., டார்க் - 52 என்.எம்., ரேஞ்ச் - 200 கி.மீ., கிரவுண்ட் கிளியரன்ஸ் - 215 எம்.எம்., டாப் ஸ்பீட் - 55 கி.மீ.,
11-Feb-2026