மஹிந்திரா எக்ஸ்.யூ.வி., 7.எக்ஸ்.ஒ., டாவின்ஸி சஸ்பென்ஷன் உள்ள உலகின் முதல் கார்
'மஹிந்திரா' நிறுவனம், 'எக்ஸ்.யூ.வி., 7.எக்ஸ்.ஒ.,' எஸ்.யூ.வி.,யை மேம்படுத்தி, 2026 மாடலில் அறிமுகம் செய்துள்ளது. இந்த காரின் முன்பதிவு, நாளை துவங்குகிறது. முதல் 40,000 பேருக்கு மட்டும், அறிமுக விலையில் கிடைக்கும். இது, மென்பொருள் கட்டுப்பாட்டில் இயங்கும் மஹிந்திராவின் முதல் கார் ஆகும். ஐந்து, ஆறு மற்றும் ஏழு சிட்டர் மாடல்களில் வரும் இந்த காரில், முதல் முறையாக 'டாவின்ஸி' என்ற புதிய சஸ்பென்ஷன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த சஸ்பென்ஷன், வேகமாக செல்லும் போது, இறுக்கமாகவும், கரடுமுரடான சாலைகளில் மென்மையாகவும் இருக்கும். பயணிகள் பாதுகாப்பை அதிகப்படுத்த, காரின் கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.