மாருதி ஸ்விப்ட் சி.என்.ஜி., அசுர மைலேஜ், 32.85 கி.மீ.,
'மாருதி சுசூகி' நிறுவனம், அதன் 'ஸ்விப்ட் சி.என்.ஜி.,' காரை புதுப்பித்து மீண்டும் அறிமுகப்படுத்தி உள்ளது. பெட்ரோல் ஸ்விப்ட் காரில் உள்ள புதிய 3 சிலிண்டர் இன்ஜின் தான் இந்த காரிலும் பயன்படுத்தப்படுகிறது. இதனால், காரின் மைலேஜ் ஆறு சதவீதம் உயர்ந்து, ஒரு கிலோவிற்கு 32 கி.மீ., வரை கிடைப்பதாகவும், கார்பன் வெளியேற்றம் ஆறு சதவீதம் குறைந்துள்ளதாகவும் மாருதி கூறி உள்ளது. ஆனால், 5 -ஸ்பீடு கியர்பாக்ஸில் மட்டுமே இந்த கார் வந்துள்ளது.டாடா, ஹூண்டாய் கார்களை போன்று இரு சி.என்.ஜி., டேங்குகள் பயன்படுத்தப்படாமல், ஒரே பெரிய டேங்க் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இதனால், பூட் பகுதி குறைவாக உள்ளது.
விலை: ரூ.8.20 லட்சம் முதல் ரூ.9.20 லட்சம் வரை
விபரக்குறிப்பு
இன்ஜின் 1.2 லிட்டர், 3 சிலிண்டர், இசட் சீரிஸ்பவர் 69.75 ஹெச்..பி.,டார்க் 101.80 என்.எம்.,மைலேஜ் 32.85 கி.மீ.,