மெர்சிடிஸ் பென்ஸ் வி - கிளாஸ் எம்.பி.வி., நகரும் 5 - ஸ்டார் ஹோட்டல்
'மெர்சிடிஸ் பென்ஸ்' நிறுவனம், 'வி - கிளாஸ்' என்ற 6 - சீட்டர் சொகுசு எம்.பி.வி., காரை மூன்று ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அறிமுகம் செய்துள்ளது. இந்த கார், முதல் முறையாக உள்நாட்டில் உற்பத்தியாகிறது. 5 லட்சம் ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்யலாம். நீளம் 5.4 மீ., உள்ள இந்த கார், 2 லிட்டர், 4 சிலிண்டர், டர்போ பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களில் வந்துள்ளது. ரியர் வீல் டிரைவ் அமைப்பு, 9 - ஸ்பீடு டார்க் கன்வர்ட்டர் ஆட்டோ கியர் பாக்ஸ் கிடைக்கிறது.