மேலும் செய்திகள்
தொடர்ந்து Hat trick கோப்பை வென்ற RCB
06-Feb-2026
'ஜெ.எஸ்.டபுள்யூ., எம்.ஜி.,' நிறுவனம், 'மெஜெஸ்டர்' என்ற இந்தியாவின் முதல் 'டி பிளஸ்' பிரிவு எஸ்.யூ.வி., காரை அறிமுகப்படுத்தி உள்ளது. 41,000 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். வினியோகம், மே மாதம் முதல் துவங்குகிறது. இது, 6 மற்றும் 7 சீட்டர் மாடல்களில் வந்துள்ளது. 'குளோஸ்டர்' காரின் அதே உற்பத்தி தளத்தில் வந்துள்ள இந்த எஸ்.யூ.வி.,யில், 2 லிட்டர், டுவின் டர்போ, டீசல் இன்ஜின் கிடைக்கிறது. இந்த இன்ஜினுடன், 8 - ஸ்பீடு டார்க் கன்வர்ட்டர் ஆட்டோ கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இது, ரியர் வீல் மற்றும் 4 - வீல் டிரைவில் வருவதோடு, முதல் முறையாக எந்த காரிலும் வராத 'மூன்று டிப்ரண்சியல் லாக்' வழங்கப்படுகிறது. இது, எந்த கடின நிலப்பரப்பையும் எளிதாக கையாள உதவுகிறது. நீரில் பயணிக்கும் திறன், 810 எம்.எம்., வரை உள்ளது. 12.3 அங்குல இரு டிஸ்ப்ளேக்கள், 3 - ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், பனரோமிக் சன் ரூப், மசாஜ் வசதியுடன் வென்ட்டிலேட்டட், பவர்டு முன்புற சீட்கள், டூயல் வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, 12 ஸ்பீக்கர் ஜே.பி.எல்., சவுண்ட் சிஸ்டம், 10 ஆப்ரோட் மோட்கள், கார் இணைப்பு வசதி, 6 காற்று பைகள், 360 டிகிரி கேமரா, அடாஸ் லெவல் - 2 பாதுகாப்பு, எம் - கிரால் மோட் உள்ளிட்ட அம்சங்கள் இதில் இருக்கின்றன. போட்டியாளர்கள்:
டொயோட்டா பார்ச்யூனர், ஸ்கோடா கோடியாக் இன்ஜின் - 2 லிட்டர், டுவின் டர்போ, டீசல் பவர் - 212 ஹெச்.பி., டார்க் - 478 என்.எம்., பூட் ஸ்பேஸ் - 343 லிட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ் - 220 எம்.எம்., டேங்க் - 75 லிட்டர் எதிர்பார்ப்பு விலை - ரூ.45 லட்சம் - ரூ.50 லட்சம்
06-Feb-2026