உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி / நிஸான் டெக்டான் எஸ்.யூ.வி., மிட் சைஸ் பேபி பேட்ரோல்

நிஸான் டெக்டான் எஸ்.யூ.வி., மிட் சைஸ் பேபி பேட்ரோல்

'நிஸான்' நிறுவனம், 'டெக்டான்' மிட் சைஸ் எஸ்.யூ.வி., காரை அறிமுகம் செய்துள்ளது. மொத்தம் ஆறு மாடல்களில் வரும் இந்த கார், 'ரெனோ டஸ்டர்' காரை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 'டஸ்டர்' காருடன் ஒப்பிடுகையில், வெளிப்புற மற்றும் உட்புற தோற்றங்கள் மட்டுமே மாறுபடுகின்றன. அதன் வெளிப்புற தோற்றம், நிஸான் நிறுவனத்தின் பிரபல 'பேட்ரோல்' காரை போல வடிவமைக்கப்பட்டுள்ளது. டஸ்டர் காரில் வரும், அதே 1 லிட்டர், 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என இரு இன்ஜின்கள் கிடைக்கின்றன. 6 - ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அடிப்படையாக கிடைத்தாலும், 1.3 லிட்டர் இன்ஜினுக்கு மட்டும் 6 - ஸ்பீடு டி.சி.டி., ஆட்டோ கியர்பாக்ஸ் வருகிறது. 10 அங்குல இரு டிஸ்ப்ளேக்கள், 18 அங்குல அலாய் சக்கரங்கள், 6 காற்று பைகள், லெவல் 2 அடாஸ் பாதுகாப்பு, 360 டிகிரி கேமரா, கூகுள் ஜெமினி, பேனரோமிக் சன்ரூப், பவர்டு, வெண்ட்டிலேட்டட் முன்புற சீட்கள், 6 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், காற்று சுத்திகரிப்பு வசதி உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மொத்தம் 11 நிறங்களில் கிடைக்கும் இந்த காருக்கு, ஹைபிரிட் இன்ஜின் வழங்கப்படாது என கூறப்படுகிறது. இன்ஜின் - 1.0 லிட்டர், டர்போ 1.3 லிட்டர், டர்போ பவர் - 100 ஹெச்.பி., 163 ஹெச்.பி., டார்க் - 160 என்.எம்., 280 என்.எம்., மைலேஜ் - 19.4 கி.மீ., 17.8 கி.மீ., (0 - 100 கி.மீ.,) பிக்கப் - 9.56 வினாடி 12.46 வினாடி கிரவுண்ட் கிளியரன்ஸ் - 212 லிட்டர் பூட் ஸ்பேஸ் - 700 லிட்டர் டேங்க் - 50 லிட்டர் விலை: ரூ. 10.49 லட்சம் - ரூ. 18.59 லட்சம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை