ரெனோ கைகர் எஸ்.யூ.வி., ஜிலு ஜிலு சீட், ஒயர்லெஸ் இணைப்புகள்
'ரெனோ' நிறுவனம், 'கைகர்' என்ற சப் காம்பேக்ட் எஸ்.யூ.வி., காரை மேம்படுத்தி, அறிமுகம் செய்துள்ளது. இந்த காரின் சேசிஸ் பலப்படுத்தப்பட்டு, எடை குறைக்கப்பட்டுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேசமயம், இன்ஜின் மற்றும் காற்றின் சத்தம், அதிர்வுகள் கேபினுக்குள் வராத அளவுக்கு உட்புறமும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில், 1 லிட்டர், 3 சிலிண்டர், என்.ஏ., மற்றும் டர்போ பெட்ரோல் இன்ஜின்கள் வருகின்றன. இதில் உள்ள 'சிலிண்டர் போர்', அதிக மைலேஜ் மற்றும் இன்ஜின் எடை குறையும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த கார், 5 - ஸ்பீடு மேனுவல், ஏ.எம்.டி., மற்றும் சி.வி.டி., ஆட்டோ கியர்பாக்ஸ்களில் கிடைக்கின்றன.