டாடா நெக்ஸான் கேமோ 360 டிகிரி கேமரா, டேஷ் கேம் வருகை
'டாடா மோட்டார்ஸ்' நிறுவனம், 'நெக்ஸான் கேமோ' என்ற சிறப்பு எடிஷன் எஸ்.யூ.வி., காரை அறிமுகம் செய்துள்ளது. 11 லட்சம் நெக்ஸான் கார்கள் விற்பனையானதை கொண்டாடும் விதமாக, இந்த எடிஷன் கார் வந்துள்ளது. இது, மொத்தம் ஐந்து மாடல்களில் கிடைக்கி றது. இயந்திர மாற்றங்கள் எதுவும் இல்லை. ஏற்கனவே உள்ள 1.2 லிட்டர், டர்போ பெட்ரோல் மற்றும் டர்போ சி.என்.ஜி., 1.5 லிட்டர், டீசல் என, மூன்று இன்ஜின்கள் நீடிக்கின் றன. இன்ஜினை பொறுத்து, மேனுவல், ஏ.எம்.டி., மற்றும் டி.சி.டி., ஆட்டோ கியர்பாக்ஸ்கள் மாறுபடும். இந்த எடிஷன் கார், மொத்தம் இரு நிறங்களில் கிடை க்கிறது. 12.3 மற்றும் 10 அங்குல இரு டி ஸ்ப்ளேக்கள், 360 டிகிரி கேமரா, டேஷ் கேம், 16 அங்குல அலாய் சக்கரங்கள், 'கேமோ' அடையாளம் ஆகியவை அடிப்படை அம்சங்கள் ஆகும். பேனரோமிக் சன் ரூப், வெண்ட்டிலேட்டட் சீட்கள் , 9 ஸ்பீக் கர் சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்டவை உயர் ரக மாடலில் மட்டுமே கிடைக்கின்றன. விலை - ரூ.9.99 லட்சம் முதல்