உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி / ஹாரியர் இ.வி., எஸ்.யூ.வி., ஆல்வீல் டிரைவ் உள்ள ஒரே டாடா கார்

ஹாரியர் இ.வி., எஸ்.யூ.வி., ஆல்வீல் டிரைவ் உள்ள ஒரே டாடா கார்

'டாடா மோட்டார்ஸ்' நிறுவனம், அதன் 'ஹாரியர் இ.வி.,' காரை அறிமுகம் செய்துள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு, இந்நிறுவன காரில் ஆல் - வீல் டிரைவ் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் முன்பதிவு, ஜூலை 2 முதல் துவக்கம்.கார் நிறத்தில் முன்புற கிரில், புதிய பம்பர்கள், கனெக்டட் டெயில் லைட், 19 அங்குல ஏரோ அலாய் சக்கரங்கள், 'அல்ட்ரா கிளைட்' சஸ்பென்ஷன்கள் ஆகியவை புதிய டிசைன் மாற்றங்கள். காரின் நீளம் 2 எம்.எம்., உயரம் 22 எம்.எம்., அதிகரிக்கப்பட்டுள்ளது.இந்த காரில், 65 மற்றும் 75 கி.வாட்.ஹார்., பேட்டரிகள் வழங்கப்படுகிறது. ரேஞ்ச், 480 முதல் 505 கி.மீ., வரை தருகிறது. 100 கி.மீ., வேகத்தை, வெறும் 6 வினாடியில் எட்டுகிறது. 120 கி.வாட்., டி.சி., பாஸ்ட் சார்ஜரில், 80 சதவீதம் சார்ஜ் செய்ய 25 நிமிடமும், 7.2 கி.வாட்., ஏ.சி., சார்ஜரில், முழுசார்ஜ் செய்ய 10 மணி நேரமும் ஆகிறது.உட்புறத்தில், 14.53 அங்குல 'சாம்சங் க்யூ - எல்.இ.டி.,' டிஸ்ப்ளே, டிஜிட்டல் பின்புற கண்ணாடி, பவர்டு பாஸ் மோடு வசதி, ஆறு டெரைன் மோடுகள், நான்கு டிரைவ் மற்றும் ரீஜென் பிரேக்கிங் மோடுகள், டோல்பி அட்மோஸ் வசதியுடன் 10 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், 540 டிகிரியில் காருக்கு அடியில் கேமரா, பாஸ்ட் டேக் உள்ளிட்ட இதர கட்டண வசதிகளுக்கு டிரைவ் பே வசதி உள்ளிட்ட பல அம்சங்கள் இதில் உள்ளன.பாதுகாப்புக்கு, ஏழு காற்று பைகள், அடாஸ் லெவல் 2, ஆட்டோ பார்க் அசிஸ்ட், இ.எஸ்.சி., ஆகியவை உள்ளன. நான்கு நிறங்களில் கிடைக்கும் இந்த கார், ரியர் வீல் டிரைவ் அமைப்பிலும் வருகிறது.

விலை: ரூ. 21.49 லட்சம்

விபரக்குறிப்பு

பேட்டரி -65 மற்றும் 75 கி.வாட்.ஹார்.,மோட்டார் பவர் - 391 ஹெச்.பி.,டார்க் - 504 என்.எம்.,பூட் ஸ்பேஸ் - 502 லிட்டர்கிரவுண்ட் கிளியரன்ஸ் - 205 எம்.எம்.,(0 - 100 கி.மீ.,) பிக்கப் - 6.3 வினாடி

டீலர்: Tafe Access Tata - 95383 67447


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி