டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் ஆல் வீல் டிரைவுக்கு, ஆட்டோ கியர்பாக்ஸ்
'டொயோட்டா' நிறுவனம், அதன் 'அர்பன் க்ரூஸர் ஹைரைடர்' என்ற காம்பேக்ட் எஸ்.யூ.வி., காரை மேம்படுத்தி அறிமுகம் செய்துள்ளது. இந்த காரின் விலை, 20,000 ரூபாய் உயர்த்தப்பட்டு, கூடுதலாக புதிய மாடல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வெளிப்புற மாற்றங்கள் பெரிதாக இல்லை என்றாலும், காரின் சேசிஸ் பலப்படுத்தப் பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. உட்புறத்தில் எலக்ட்ரானிக் மற்றும் வென்டிலேட்டட் சீட்கள், வெயிலின் தாக்கத்தை குறைக்க 'சன் ஷேட்' வசதி, அலங்கார விளக்குகள், காற்றை சுத்தப்படுத்தும் 'ஏர் ப்யூரிபையர்', யூ.எஸ்.பி., 'டைப் - சி' சார்ஜிங் போர்ட், டயர் அழுத்தம் கண்காணிப்பு அமைப்பு, உட்புற எல்.இ.டி., லைட்டுகள் ஆகியவை கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன. அடிப்படை அம்சமாக ஆறு காற்று பைகள், சில மாடல்களில் எலக்ட்ரானிக் பிரேக் வசதி வழங்கப்படுகிறது. ஆல் வீல் டிரைவ் அமைப்பு உள்ள மாடலில் வரும் மட்டும், 5 - ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ்க்கு பதிலாக, 6 - ஸ்பீட் ஆட்டோ கியர் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.இன்ஜினை பொறுத்த வரை, மைல்டு ஹைபிரிட், 1.5 லிட்டர், 4 - சிலிண்டர் இன்ஜின் மற்றும் வலுவான ஹைபிரிட், 1.5 லிட்டர், 3 - சிலிண்டர் இன்ஜின் பயன்படுத்தப்படுகின்றன. மைல்டு ஹைபிரிட் இன்ஜின், 21.12 கி.மீ.,ரும், வலுவாக ஹைபிரிட் இன்ஜின், 27.7 கி.மீ., மைலேஜும் தருகிறது.