மேலும் செய்திகள்
குபேரா - டிரைலர்
16-Jun-2025
'டி.வி.எஸ்., மோட்டார்' நிறுவனம், 'அப்பாச்சி ஆர்.டி.ஆர்., 200 4வி' பைக்கை மேம்படுத்தி அறிமுகம் செய்துள்ளது. இதனால், பைக்கின் விலை, 5,370 ரூபாய் அதிகரித்துள்ளது.மேம்படுத்தப்பட்ட வெளிப்புற 'கிராபிக்ஸ்', புதிய சிவப்பு நிற அலாய் சக்கரங்கள், 37 எம்.எம்., புதிய முன்புற 'யூ.எஸ்.டி.,' போர்க் சஸ்பென்ஷன்கள், சீரமைக்கப்பட்ட ஹேண்டில் பார் ஆகியவை இதில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்.இதில் ஏற்கனவே உள்ள 197.75 சி.சி., சிங்கிள் சிலிண்டர் ஆயில் கூல்டு இன்ஜின் நீடிக்கிறது. 'ஒ.பி.டி., 2பி' உமிழ்வு விதிமுறைக்கு ஏற்றவாறு, இந்த இன்ஜின் மேம்படுத்தப்பட்டுள்ளது. டூயல் சேனல் ஏ.பி.எஸ்., ரேஸ் ட்யூன் ஸ்லிப்பர் கிளட்ச், அட்ஜஸ்டபில் கியர் லிவர், புளூடூத் இணைப்பு, உள்ளிட்டவை இந்த பைக்கில் உள்ள இதர அம்சங்கள்.இந்த பைக் மூன்று புதிய நிறங்களில் கிடைக்கிறது.
இன்ஜின் - 197.75 சி.சி., சிங்கிள் சிலிண்டர், ஆயில் கூல்டுபவர் - 20.8 ஹெச்.பி.,டார்க் - 17.25 என்.எம்.,மைலேஜ் - 41 கி.மீ.,டாப் ஸ்பீடு - 136 கி.மீ.,
16-Jun-2025