டி.வி.எஸ்.,ன் ஆர்பிட்டர் கம்மி விலை இ.வி., ஸ்கூட்டர்
'டி .வி.எஸ்.,' நிறுவனம், 1 லட்சம் ரூபாய்க்குள் 'ஆர்பிட்டர்' என்ற மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டரில், 3.1 கி.வாட்.ஹார்., லித்தியம் அயான் பேட்டரி வழங் கப்பட்டுள்ளது. முழு சார்ஜில், 134 கி.மீ., வரை செல்லும் என இந்நிறுவனம் கூறுகிறது. இதன் டாப் ஸ்பீடு, 69 கி.மீ.,யாக உள்ளது. பேட்டரியை முழு சார்ஜ் செய்ய 4.10 மணி நேரம் எடுக்கிறது. 'ஏத்தர் ரிஸ்டா' இ.வி., ஸ்கூட்டருக்கு போட்டியாக வரும் இந்த ஸ்கூட்டரில், 14 மற்றும் 12 அங்குல அலாய், ஸ்டீல் சக்கரங்கள், டிரம் பிரேக்குகள், எல்.இ.டி., லைட்டுகள், 34 லிட்டர் பூட் ஸ்பேஸ் உள்ளிட்டவை வருகின்றன.