உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி /  டைரான் ஆர் - லைன் உற்பத்தி துவக்கம்

 டைரான் ஆர் - லைன் உற்பத்தி துவக்கம்

'போக்ஸ்வேகன் டைரான் ஆர் - லைன்' எஸ்.யூ.வி., கார் நடப்பு காலாண்டில் அறிமுகமாக உள்ள நிலையில், அதன் உற்பத்தி இந்தியாவில் துவங்கியது. இது, மஹாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் உள்ள இந்நிறுவன ஆலையில் உற்பத்தியாகிறது. இந்த காரில் 7 பேர் வரை பயணம் மேற்கொள்ளலாம். இதில், 2 லிட்டர், டி.எஸ்.ஐ., இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. 7 - ஸ்பீடு டி.சி.டி., ஆட்டோ கியர்பாக்ஸ், 7 காற்று பைகள், 360 டிகிரி கேமரா, அடாஸ் லெவல் - 2, 15 அங்குல டச் ஸ்கிரீன், பேனரோமிக் சன்ரூப், 3 - ஜோன் ஆட்டோ ஏ.சி., உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. இது, கோடியாக், மெரீடியன், கிளாஸ்டர் உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக வருகிறது. எதிர்பார்ப்பு விலை: ரூ.45 - ரூ.50 லட்சம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ