விங்கர் பிளஸ் வேன் டாடாவின் 9 - சீட்டர் மினி டிராவலர்
'டா டா மோட்டார்ஸ்' நிறுவனம், 'விங்கர் பிளஸ்' என்ற 9 - சீட்டர் வேனை மேம்படுத்தி, அறிமுகம் செய்துள்ளது. இது, ஆம்புலன்ஸ், சுற்றுலா மற்றும் இதர போக்குவரத்து வசதிகளுக்கு பயன்படுத்தப்படும் வேன் ஆகும். காரை போன்ற நிலையான பயணத்திற்கு, 'மோனோகாக் சேசிஸ்', அகலமான கேபின், பயணிகள் கால் வைப்பதற்கு போதுமான இடம், தனித்தனி ஏசி., வென்ட்டுகள் மற்றும் சார்ஜிங் வசதி, ரிக்லைன் சீட்கள், அதிக பூட் ஸ்பேஸ், பவர் ஸ்டீயரிங் உள்ளிட்டவை இதன் சிறப்பம்சங்கள். இதில், பழைய 'சபாரி, ஆரியா' உள்ளிட்ட கார்களில் வரும் அதே, 2.2 லிட்டர், 4 - சிலிண்டர், 'டிகர்', டீசல் இன்ஜின் வழங்கப்படுகிறது. குறைவான எரிவாயு செலவு, அதிக லாபம், நம்பகமான இன்ஜினுடன் இந்த வேன் உருவாக்கப்பட்டுள்ளதாக இந்நிறுவனம் கூறுகிறது.