யெஸ்டி ஸ்கிராம்பிளர் 350 குறைந்த எடை 350சிசி பைக்; 174 கிலோ
'கிளாசிக் லெஜெண்ட்ஸ்' நிறுவனம், அதன் 'யெஸ்டி ஸ்கிராம்பிளர் 350' பைக்கை மேம்படுத்தி, 2026 மாடலில் அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்கின் விலை, பழைய மாடலை விட 5,000 ரூபாய் குறைந்துள்ளது. இதில் உள்ள 334 சிசி 'ஆல்பா' இன்ஜின், அடுத்த தலைமுறைக்கு மேம்படுத்தப்பட்டு, 'கத்தார்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்ஜினின் அதிர்வுகள் குறைக்கப்பட்டு, அதிக பிக்கப் வாழங்கும் வகையில் மேம்படுத்தியுள்ளதாக இந்நிறுவனம் கூறுகிறது. இந்த பைக்கின் எடை, எட்டு கிலோ வரை குறைக்கப்பட்டுள்ளதால், மைலேஜ் 30 கி.மீ.,ருக்கும் அதிகமாக தரும் என கூறப்படுகிறது.