உள்ளூர் செய்திகள்

/ கனவு இல்லம் / ஆலோசனை / வீட்டுக்கடன் வட்டி விகிதங்களில் ஏற்படும் திடீர் மாற்றங்களை கவனிக்க வேண்டும்!

வீட்டுக்கடன் வட்டி விகிதங்களில் ஏற்படும் திடீர் மாற்றங்களை கவனிக்க வேண்டும்!

சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் அதற்கு தேவையான நிதியை திரட்டுதவற்கான வழிகளை ஆராய வேண்டும். இன்றைய சூழலில், என்ன பட்ஜெட்டில் வீடு வாங்க வேண்டும் அல்லது கட்ட வேண்டும் என்று திட்டமிட்டாலும் அந்த மதிப்பில், 30 சதவீத தொகை உங்கள் கையில் இருக்க வேண்டும். சொத்தின் மதிப்பில், 90 சதவீத தொகையை வங்கி கடனாக கெடுத்துவிடும் நிலையில், நாம் ஏன், 30 சதவீத தொகையை வைத்திருக்க வேண்டும் என்ற கேள்வி எழும். இதில், பொதுவாக வங்கிகள் எப்படி செயல்படுகின்றன என்பதை துல்லியமாக அறிந்தால் பல்வேறு விஷயங்கள் தெளிவாகும். பெரும்பாலான மக்கள் வீட்டுக்கடன் வாங்கும் போது தான் எந்த வங்கியில் என்ன வட்டி விகிதம் கடைபிடிக்கப்படுகிறது என்பதை கவனிக்கின்றனர். அதில் எந்த வங்கி நம் விண்ணப்பத்துக்கு ஒப்புதல் தருகிறதோ அந்த வங்கியை தேர்வு செய்துவிடுவது வழக்கமாக உள்ளது. தற்போதைய சூழலில், பெரும்பாலான பொதுத்துறை வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள் வீட்டுக்கடன் வட்டி விகிதங்கள் என்ன என்பதை வெளிப்படையாக அறிவிக்கின்றன. இதில், உங்களுக்கு எந்த வட்டி விகிதம் ஏற்றது என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். வீட்டுக்கடன் வாங்க வேண்டும் என்ற நிலையில் வங்கிக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் சலிக்காமல் செல்வோர், அதன்பின் அந்த பக்கமே செல்வதில்லை. வீட்டுக்கடன் வாங்கிய பின், அதற்கான மாத தவணை தொகையை ஆன்லைன் முறையில் கழித்துக்கொள்ள ஒப்புதல் அளிக்கிறோம். இ.சி.எஸ்., என்ற முறையில் வங்கிகள் உங்கள் தனிப்பட்ட வங்கி கணக்கில் இருந்து மாதாந்திர தவணை தொகையை குறிப்பிட்ட தேதியில் எடுத்துக் கொள்ளும். இது விஷயத்தில், ஒவ்வொரு மாதமும்தவணை முறையாக செல்கிறதா என்ற நிலையுடன் பலரும் அமைதியாகிவிடுகின்றனர். ரிசர்வ் வங்கி ஏதாவது அறிவிப்பை வெளியிடும் போது தான் தங்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் வருகிறதா என்று மக்கள் கவனிக்கின்றனர். ஆனால், இதற்கு அப்பால் வங்கிகள் தங்களுக்கான சொந்தை கொள்கை முடிவு அடிப்படையில் வட்டி விகிதங்களில் சில மாற்றங்களை செய்கின்றன. இதன் அடிப்படையில் வட்டி விகிதங்களை மாற்றும் போது, அது குறித்து ஒவ்வொரு கடன் தாரருக்கும் வங்கிகள் தனிப்பட்ட முறையில் தெரிவிக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான வங்கிகள், இது தொடர்பான பொது அறிவிப்பை வெளியிட்டுவிட்டு அமைதியாக இருந்துவிடுகின்றன. இதனால், வட்டி விகிதங்கள் தொடர்பான மாற்றங்கள் கடன் வாங்கியவரின் கவனத்துக்கு வராமல் போகும் நிலை ஏற்படுகிறது. இதில் வங்கிகள் தங்கள் அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் மக்களும் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது என்கின்றனர் ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பீட்டாளர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ