உள்ளூர் செய்திகள்

/ கனவு இல்லம் / ஆலோசனை / பட்டணம் அருகே கல் குவாரி இயங்கிய இடத்தில் பூமி விலைக்கு வாங்கலாமா?

பட்டணம் அருகே கல் குவாரி இயங்கிய இடத்தில் பூமி விலைக்கு வாங்கலாமா?

கோவை மாவட்டம், சூலுார் வட்டம், பட்டணம் அருகே கொச்சி - சேலம் பைபாஸ் அடுத்துள்ள பகுதியில் கல் குவாரிகள் சில ஆண்டுகள் இயங்கின. தற்போது, அந்த இடத்தில் சிறு தொழிற்சாலைகள் அமைந்துள்ள நிலையில் அருகே, 25 சென்ட் அளவிலான பூமி விலைக்கு வருகிறது. என்ன விலைக்கு வாங்கலாம்.-கனகராஜ், கோவை.தற்போது, கல் குவாரிகள் இயங்குவதில்லை என்பதை, அந்த பகுதி தாசில்தாருக்கு ஆர்.டி.ஐ., வாயிலாக விண்ணப்பித்து கேட்டு, உறுதிசெய்து கொள்ளவும். தொழிற்சாலைகள் அமைய உள்ள பகுதியா அல்லது குடியிருப்பா, வியாபாரமா என என்ன பயன்பாட்டு மண்டலம் என்பதை 'மாஸ்டர் பிளான்' கொண்டு தெரிந்து கொள்ளவும். தொழிற்சாலை பகுதி என்றால் தங்கள் தொழிலின் மொத்த பட்ஜெட்டில் (நிலம்+கட்டடம்+இயந்திரம்/தளவாடம், 10-15 சதவீதத்துக்குள் நிலம் வாங்க முயலவும். இல்லையேல், நிலத்தில் போடப்பட்ட பணம் முடங்கிய மூலதனமாக மாறி, தொழிற்சாலையை சிறப்பாக நடத்த இயலாமல் போகலாம். எது எவ்வாறு இருப்பினும், ஒரு சென்ட் ரூ.3 முதல், 3.5 லட்சத்துக்கு மிகாமல், 25 சென்ட் இல்லையென்றாலும், 15 - 20 சென்ட் என வாங்கி கட்டடம் கட்டி தொழில் துவங்கவும்.எங்களுக்கு பி.என்.புதுாரில் உள்ள, 4.5 சென்ட் இடத்தில்(நீளம் 65, அகலம், 30 அடி) வடக்கு பார்த்து, ஒரு பிஎச்கே வசதியுடன் வீடு உள்ளது. இந்த பழைய கட்டடத்துக்கு மாதம் ரூ.12 ஆயிரம் வாடகை வருகிறது. மெயின் ரோட்டில் இருந்து எங்கள் வீட்டுக்கு, 12 அடியில் ரோடு வருகிறது. இந்த சொத்தை விற்பனை செய்ய எண்ணி உள்ளோம். என்ன விலைக்கு விற்கலாம்.-சிவராஜ், வீரகேரளம்.அணுகுபாதை என்பது சொத்தின் மிக முக்கியமான ஒரு அங்கம் மற்றும் அமைப்பு. மேலும், உங்கள் கட்டடம் உரிய அனுமதி, வரி விதிப்பு பெற்ற ஒன்றா என்பது பற்றி தகவல் தரப்படவில்லை. ரூ.50 லட்சம் என்பது தவறில்லை என எண்ணத் தோன்றுகிறது.மேட்டுப்பாளையம் ரோடு, சிந்தாமணி சூப்பர் மார்க்கெட் அருகே மூன்று சென்ட் இடம் வாங்க உள்ளேன். இடத்துக்கான ரோடு, 35 அடியில் செல்கிறது. எவ்வளவு விலை கொடுத்து வாங்கலாம்.- அனிதா, கோவை.நீங்கள் சொல்லும் இடம், சிந்தாமணி சூப்பர் மார்க்கெட்டுக்கு வடது புறமாக கிழக்கு நோக்கி ரயில்வே எல்லையில் முடியும் சாலை அருகே உள்ளது என்று தோன்றுகிறது. அந்த தெருவில் அனைத்தும் பழைய கட்டடங்களாகவும், குடோன்களாகவும் இருந்து வருகிறது. இருப்பினும், சென்ட் ரூ.35-40 லட்சம் கொடுத்து வாங்கி, 3,000 சதுரடியில் கட்டடம் எழுப்பி, ரூ.80 ஆயிரம் வரை வாடகை வாங்கலாம்.கோத்தகிரி நகராட்சி, கார்சிலி எஸ்டேட் பகுதியில், 70 ஆண்டுகள் பழமையான இணைப்பு சுவருடன் கூடிய எஸ்டேட் குடியிருப்பு விலைக்கு வருகிறது. என்ன விலை கொடுத்து வாங்கலாம். இணைப்பு சுவர் உள்ள வீட்டுக்கு வங்கி கடன் கிடைக்குமா?-சுரேஷ், கோத்தகிரி.தாங்கள் கூறும் இடமானது கோத்தகிரி டவுனில் இருந்து, 2.5 கி.மீ., தொலைவில் உள்ளது. குறிப்பிட்ட இனத்தவர் வாழும் பகுதியாக தெரிகிறது. இந்த இடத்தில் இருந்து, மற்ற ஊர்களுக்கு செல்ல பஸ் வசதி கிடையாது என தெரிகிறது. இக்காரணங்களால் சென்ட் ஒன்று ரூ.2 லட்சம் கொடுத்து வாங்கலாம்.-தகவல்: ஆர்.எம். மயிலேறு,கன்சல்டிங் இன்ஜினியர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை