செட்டிபாளையம் ரோட்டில் கிழக்கு பார்த்த 7.5 சென்ட் என்ன விலைக்கு வாங்கலாம்?
கோவை மாவட்டம்: -சீதா: கோவை-மேட்டுப்பாளையம் ரோடு விரிவடைந்து கொண்டே இருக்கிறது. இருபுறமும் கடைகள், அலுவலகங்கள் வந்தால் ரோட்டின் பின்புற பகுதிகளில் வீடு, பள்ளிகள், பொது இடங்களாகத்தான் மாறவேண்டி இருக்கும். தாங்கள் கூறும் இடம் பஸ் ஸ்டாப்பில் இருந்து, 10 நிமிட நேரத்தில் நடந்து அடைய இருக்கும்போது ரூ.5 லட்சம் முதல், 6 லட்சம் வரை சென்ட்டுக்கு தருவது தவறில்லை. சுற்றுச்சுவர் என சேர்த்து பார்க்கும்போது மொத்தமாக ரூ.25 லட்சம் கண்டிப்பாக தரலாம். கோவை மாவட்டம்: -வி.சுபாஷ்: விரிவடைந்த அல்லது விரிவடைய உள்ள சாலையில் இருந்து, 200 மீ., தொலைவு என்பது வீடுகள் வருவதற்குள்ள இடமே ஆகும். பஸ் வசதிகள் நிறைய உள்ளன. 15 நிமிடத்தில் போத்தனுார் பஜாருக்கு வந்து விடலாம். பள்ளிகள், மருத்துவமனைகள் அருகே உள்ள நிலையில், சென்ட் ரூ.10 லட்சத்திற்கு மேல்தான் மதிப்பிட வேண்டும். ஆறு வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்றால் வாடகை வருமானம் கருதித்தான் கட்டியுள்ளார்கள். அதன் மதிப்பு சதுரடிக்கு ரூ.1,250 என எடுத்துக்கொண்டால் ரூ.1.50 கோடி என்பது நல்ல மதிப்பு. வாடகையாக மாதம் ரூ.40 ஆயிரம் வந்தால்தான், இந்த மதிப்பு சரி. கோவை மாநகராட்சி: - பரமேஸ்வரன்: கண்ணை மூடிக்கொண்டு, ரூ.15 லட்சத்திற்கு வாங்கலாம். ஆனால், இடத்தின் அகலம், 25 அடியாவது இருக்கிறதா என்பதை பார்க்கவும். அப்போதுதான் இந்த குறுகிய சாலையில் நல்ல காற்றோட்டமாக வீட்டை இரண்டு போர்ஷனாக கட்டி வசிக்க முடியும். -தகவல்:: ஆர்.எம். மயிலேறு: கன்சல்டிங் இன்ஜினியர்.: