உள்ளூர் செய்திகள்

/ கனவு இல்லம் / ஆலோசனை /  ஆண்டுகளை பொறுத்து சொத்து மதிப்பு குறையுமா? குறுக்கு விதி குறித்து கன்சல்டிங் இன்ஜினியர் விளக்கம்

 ஆண்டுகளை பொறுத்து சொத்து மதிப்பு குறையுமா? குறுக்கு விதி குறித்து கன்சல்டிங் இன்ஜினியர் விளக்கம்

காரணம்பேட்டையில் இருந்து 3 கி.மீ., தொலைவில் உள்ள சின்னகோடங்கி பாளையம், பருவாய் கிராமத்தில் எனக்கு சொந்தமாக மூன்று சென்ட் இடம் உள்ளது. அந்த இடத்தை விற்பனை செய்ய உள்ளேன். என்ன விலைக்கு விற்கலாம் . -சந்திரசேகரன்: திருச்சி ரோடு மேலும் விரிவாக்கப்பட உள்ளது. அதனால் அது சார்ந்த இடங்கள் என்பது வரவேற்கத்தக்கதாகவே இனி அமையும். அதுவும் டவுன் பஸ், சர்வீஸ் பஸ் இருந்தால் கேட்கவே வேண்டாம். இடத்தின் அகலம் குறிப்பிடவில்லை. 30 அடிக்கு குறைவாக அகலம் இருந்தும் ரோடானது 23 அடி அகலத்தில் இருந்தால் கண்டிப்பாக ரூ.7 முதல் 8 லட்சத்துக்கு சென்ட் விலை எதிர்பார்க்கலாம். ஆனால் மேற்படி இடம் டி.டி.சி.பி., அப்ரூவல் சைட்டாகவோ அல்லது வரன்முறைப்படுத்தப்பட்டதாகவோ இருக்க வேண்டும் என்பது குறிப் பிடத்தக்கது. நீலாம்பூர் டெக்கத்லான் அருகே மெயின் ரோட்டில் இருந்து, 100 மீ., தொலைவில் உள்ள அபார்ட்மென்டில் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ரூ.28 லட்சத்துக்கு சொத்து முதலீட்டுக்காக வாங்கிய, 800 சதுரடி கொண்ட 2பி.எச்.கே., நான்காவது தளத்தில் உள்ளது. தற்போது சொத்து மதிப்பு ரூ.45 லட்சம். வாடகை வருமானம் ரூ.15 ஆயிரம். அபார்ட்மென்ட்டை பொறுத்தவரை 10 வருடங்களுக்கு மேல் மதிப்பு குறையும் என்று சொல்கிறார் களே. இப்போது விற்பனை செய்வது நல்லதா அல்லது இன்னும் 10 வருடங்களுக்கு வைத்திருந்தால் நல்ல மதிப்பு கிடைக்குமா? -கார்த்திக்: ரூ.45 லட்சம் மதிப்புள்ள பிளாட்டிற்கு ரூ.15 ஆயிரம் வாடகை என்பது நல்ல பயனுள்ள ஒரு சொத்தாகும். இன்னும் ஐந்து ஆண்டுகள் வரை வைத்திருந்து மதிப்பு ரூ.60 லட்சமாகும் வரை வைத்து, பின்னர் விற்பது புத்திசாலித்தனம். பிளாட்டை பொறுத்தவரை கட்டடத்தின் மதிப்பு குறையும். அதேசமயம் காலி யிடத்தின் மதிப்பு உயரும் என்பதுதான் ஒரு குறுக்கு விதி. கணக்கு போட்டு பார்த்துக்கொள்ளவும். -தகவல்: ஆர்.எம்.மயிலேறு கன்சல்டிங் இன்ஜினியர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ