மேலும் செய்திகள்
'கமிஷன்' வெட்டு... 'கல்லா' கட்டு!
18-Nov-2025
வீ ட்டின் அழகை கூட்டுவதில் முகப்பு பகுதி, முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அந்த வகையில் 3டி எலிவேஷன் என்பது, அழகுக்கும் அழகு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது. 'காட்சியா' உறுப்பினர் அன்னாரீனா கூறியதாவது: இன்றைய காலகட்டத்தில், கட்டடத்துறையில் '3டி எலிவேஷன்' என்பது பெரும்பாலான வர்கள் கேட்கும் ஒரு பரவலான சொல். ஆனால், இதை எல்லோரும் சரியாக புரிந்துகொள்வது அவசியம். 3டி எலிவேஷன் என்பது ஒரு வீட்டின் வெளிப்புற அழகை, நிற அமைப்பை, வடிவமைப்பை கம்ப்யூட்டர் வழியாக முன்பே பார்ப்பதற்கான ஒரு காட்சிப்படம். இதன் வாயிலாக வாடிக்கையாளர், கட்டடம் முடிந்த பிறகு அது எப்படி இருக்கும் என்பதை கண்ணில் காண முடிகிறது. இது ஒரு அழகியல் வழிகாட்டி மட்டுமே. ஆனால், கட்டடத்தின் 'ஸ்ட்ரக்சுரல் டிசைன்' என்பது வேறு. அதுதான் கட்டடத்தின் எலும்புக்கூடு. அதில், பீம், காலம், ஸ்லாப் போன்றவை எப்படி சுமையை தாங்கும் என்று கணக்கிடப்படுகிறது. இதுதான் வீட்டின் பாதுகாப்பு அடிப்படை. எனவே, 3டி எலிவேஷன் இல்லாமல் ஒரு வீடு கட்ட முடியும். ஆனால், 3டி எலிவேஷன் இருந்தால் கட்டடத்தின் வெளிப்புற தோற்றம் குறித்து, முன்னரே தெளிவாக தெரிந்துகொள்ள முடியும். இதனால், பிற்காலத்தில் மாற்றம் செய்ய வேண்டிய சிக்கல்கள் தவிர்க்கப்படலாம். மொத்தத்தில், 3டி எலிவேஷன் அழகுக்காக, 'ஸ்ட்ரக்சுரல் டிசைன்' பாதுகாப்புக்காக என, இரண்டுமே தங்களது துறைகளில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆனால் கட்டடம் கட்ட, 3டி அவசியமில்லை; 'ஸ்ட்ரக்சுரல் டிசைன்'தான் அவசியம். இவ்வாறு, அவர் கூறினார்.
18-Nov-2025