திட்டமிட்டால் சுலபமாக சொந்த வீடு கட்டலாம்! பணத்தை திரட்டுவதற்கு பொறியாளர்கள் யோசனை
ஒரு இடத்தை வாங்குவது, பின்னர் அந்த இடத்திலே வீடு கட்டுவது என இரு நிலைகளில் பணம் தேவைப்படுகிறது.'கொசினா' உறுப்பினர் மாரிமுத்துராஜ் கூறியதாவது:எல்லோராலும் பணத்தை மொத்தமாக வைத்துக்கொண்டு வீடு கட்ட முடியாதுதான். அப்போது, கடன்வாங்கித்தான் கட்ட வேண்டும்.நல்லதுக்காக, கடன் வாங்குவது தவறே கிடையாது. ஏனெனில், உங்கள் கடன் வீடாக மாறுகிறது. வாங்கும் கடனை அடைக்க, இருக்கும் அத்தனை வழிகளையும் ஆராய்ந்த பின்னர் கடன் வாங்கலாம். இன்றைய நிலையில் பல நாடுகள் கூட உலக வங்கி, பன்னாட்டு தொழில்வள வங்கி போன்ற நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்கி, தங்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு திட்டங்களை நிறைவேற்றுகின்றன.அதேபோல், வீடு கட்டுவதால் ஏற்படும் நம்முடைய பொருளாதார வளர்ச்சி, வங்கியில் வாங்கிய கடனை அடைக்க வழிவகை செய்யும்.வாடகை வீட்டில் ஒருவர், 10 வருடமாக இருக்க நேர்கிறது என்றால், அவர் கொடுக்கும் வாடகை பணத்துடன் சிறு தொகை சேர்த்து, மாதம் கடனை கட்டி சொந்த வீடு கட்டலாம்.சரியாக கணக்கு போட்டு கவனமாக கடன் வாங்கி, அதற்கான வழிவகையின்படி, அதை கண்ணும் கருத்துமாக அடைத்துவிட்டால் பிரச்னையே வராது.தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள், ஆயுள் காப்பீட்டு கழகம், கூட்டுறவு கட்டட சங்கங்கள், வீடுகள் பெருக நிதி உதவும் சங்கம் போன்ற பல நிதி நிறுவனங்கள் இன்றைய காலத்தில் உள்ளன.எனவே, நன்கு விசாரித்து உங்கள் நிலைக்கு ஒத்துவரக்கூடிய நிதி நிறுவனத்தை தேர்வு செய்து, சரியான முறையில் கடனை கட்டி முடிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
வீடு கட்ட இதோ பணம்!
n திட்டமிட்டு சிறுக, சிறுக சேமித்து வைத்து பயன்படுத்துவது, நம்மிடம் இருக்கும் தங்கம் மற்றும் பல பொருட்களை ஈடாக வைத்து, அதன் மூலம் கிடைக்கும் பணத்தை பயன்படுத்தி வீடு கட்டலாம்.n ஏலச்சீட்டு போட்டு அதிலிருந்து பணத்தை எடுக்கலாம்.n பங்கு பத்திரங்களை மாற்றி, அதிலிருந்து வரும் பணத்தை பயன்படுத்தலாம்.n வளர்கின்ற வைப்புத்தொகை மூலம் பணத்தை உருவாக்கலாம்.n நாம் பாலிசிக்காக கட்டிய தொகை, வருங்கால வைப்புநிதியில் இருந்து எடுக்கலாம்.இப்படி பல வழிகளில் சேமித்து வைத்த பணத்தை கொண்டு வீடு கட்ட துவங்கலாம் என்கிறார் பொறியாளர் மாரிமுத்து.