உள்ளூர் செய்திகள்

/ கனவு இல்லம் / வீடு பராமரிப்பு / கனவு இல்லத்திற்கு பர்னிச்சர் வாங்கணுமா?: இதெல்லாம் கவனியுங்க..!

கனவு இல்லத்திற்கு பர்னிச்சர் வாங்கணுமா?: இதெல்லாம் கவனியுங்க..!

புது வீடு கட்டி குடியேற நினைக்கும் அனைவருக்கும் பல டிசைன்களில் கட்டில், டைனிங் டேபிள், நாற்காலி உள்ளிட்ட பர்னிச்சர்களை வாங்கி வீட்டை அழகுப்படுத்த எண்ணுவார்கள். ஒருமுறை முதலீடு என்பதாலும், நம்முடன் பல ஆண்டுகள் பயணிக்க வேண்டும் என்பதற்காக தரம் மிகவும் அத்தியாவசியமாகும். இப்படி பர்னிச்சர்கள் வாங்க முன் கவனிக்க வேண்டியவை குறித்து தெரிந்து கொள்வோம்.

கவனம்

பர்னிச்சர் வாங்குவதற்கு முன் எந்தமாதிரியான மாடல்களை தேர்ந்தெடுக்க போகிறீர்கள் என்பதில் கவனம் கொள்ள வேண்டும். மாடர்ன், ட்ரெடிஷன்ஸ், ஆன்டிக் என எந்த வகையாக இருந்தாலும், அதை கவனமாக தேர்ந்தெடுக்க மறக்காதீர். அதைபோல எந்த டிசைன் வேண்டும் என்பதையும் முன்கூட்டியே தீர்மானித்து விடுங்கள்.

அளவு

நமது வீட்டின் அளவு மற்றும் அறைகளின் அளவுகளை மனதில் வைத்துக் கொண்டு அதற்கு ஏற்றாற்போல் பர்னிச்சர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். குறிப்பாக டைனிங் டேபிள், நாற்காலி, கட்டில், பீரோ என ஒவ்வொன்றும் எந்த இடத்தில் வைக்கபோகிறீர்கள் என்பதை முன்கூட்டியே தீர்மானித்து, அதற்கான அளவுகளை சொல்லி வாங்குவது அவசியமாகும்.

வசதி

அளவை போன்று சவுகரியமும் முக்கியமாகும். நாம் வாங்கும் பர்னிச்சர்களில் உட்காந்தால் அது நமக்கு சந்தோசத்தை தரும் அளவிற்கு சவுகரியமாக இருப்பது நல்லது.

சலுகைக்கு முன்னுரிமை வேண்டாம்

சில கடைகளில் தரமற்ற பொருட்களை விற்பனை செய்ய அதிகளவில் தள்ளுபடி அறிவிப்பார்கள். ஒரு சில ஆயிரம் குறைவாக கிடைக்கும் என்பதற்காக அந்த பொருட்களை வாங்க முன்னுரிமை அளிக்க வேண்டாம். அது நமக்கு இருமடங்கு செலவை வைத்து விடும்.

மரத்தின் தரம்

நாம் வாங்கும் பர்னிச்சர்கள் செய்யப்படும் மரத்தின் தரத்தை அறிந்து கொள்வது அவசியமாகும். இதற்கு நகத்தால் அந்த பொருட்களை கீறிப்பாருங்கள். அதைபோல் மரத்தை தட்டிப் பார்க்கும் போது, எழும் சத்தம் மற்றும் அதிர்வை வைத்தும் அறிந்துக் கொள்ளலாம். அதேபோல் அடிப்புறத்தை திருப்பி பார்த்து பழைய மரமா?அல்லது புதிய மரமா? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.

மரத்தின் தன்மை

நாம் வாங்கும் பர்னிச்சரின் எடை அதிகமாக இருந்தால் அது பல ஆண்டுகளுக்கு நிலைத்து இருக்கும்.

வேலையை நேர்த்தியை கண்டறிதல்

பர்னிச்சர் எவ்வாறு தயாரித்துள்ளனர் என்பதை கவனிக்க வேண்டும். சரியான அளவுகளில் மரத்தை அறுத்து வேலைப்பாடு நடந்துள்ளதா? அல்லது ஏதேனும் பிசிர்கள் தெரிகிறதா? என்பதை கவனிக்க வேண்டும். மரப்பிசினை பயன்படுத்தியுள்ளனரா, ஆணிகள் அதிகம் அடிக்கப்பட்டுள்ளதா என்பதையும் சோதிக்க வேண்டும். ஆணிகள் அதிகம் பயன்படுத்தி இருந்தால் அவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

ஆலோசனை

பர்னிச்சர்கள் வாங்க செல்லும் முன் முன்அனுபவம் வாய்ந்தவர்களிடன் ஆலோசனை பெறுவது அவசியமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி