உள்ளூர் செய்திகள்

அக்கரை அதிசயம்!

'ஒரு பொண்ணு எதை செய்யலாம்னு 5 விஷயம் இருக்கு; எதை செய்யக் கூடாதுன்னு 50 விஷயம் இருக்கு!' - 2015ல் வெளியான 36 வயதினிலே படத்தின் வசனம் இது. திண்டுக்கல், என்.பஞ்சம்பட்டி கிராமத்தின் சு.ஜெயந்தி, 1998ல் எடுத்த முடிவு...'மத்தவங்க அனுமதிக்கிற 5 விஷயங்களை காட்டிலும், நமக்கு பிடித்த 50 விஷயங்களைச் செய்யணும்!'கிளை கண்ட பறவைஎன்னையும் சேர்த்து எங்க வீட்ல 5 பொண்ணுங்க; பசங்க கிடையாது! இளங்கலை பொருளாதாரம், நுாலக அறிவியல், முதுகலை சமூகப்பணின்னு திருமணத்திற்கு அப்புறமும் நான் படிப்பை தொடர்ந்தேன். 1998; என் 24 வயசுல பெண்கள் சுய உதவிக்குழு உறுப்பினர் ஆனேன். வானத்துல நெடுநேரமா வட்டமிட்ட பறவை இறுதியில தனக்கான கிளையை தேர்வு செஞ்ச மாதிரி அன்னைக்கு நான் உணர்ந்தேன்.என் கேள்விஇப்போ நான் ஊராட்சி அளவிலான பெண்கள் கூட்டமைப்பின் செயலர். இதனால என் செல்போன் இரவு நேரங்கள்லேயும் ஒலிச்சுக்கிட்டே இருக்கும். என் மூணாவது மகள் கைக்குழந்தையா இருந்தப்போ அவளை சுமந்துக்கிட்டு களப்பணி செஞ்சிருக்கேன். இதையெல்லாம் ஒரு ஆண் செஞ்சா 'ஆளுமை'ன்னு பாராட்டுற சமூகம், 'ஏன் இப்படி அநாவசிய சுமையை உன் தலையில ஏத்திக்குறே'ன்னு எனக்கு அறிவுரை சொல்லுச்சு; இது ஏன்?ஜெயந்தி செயலராக உள்ள பெண்கள் கூட்டமைப்பு என். பஞ்சம்பட்டி கிராமப் பகுதிகளின் 'நெகிழி' குப்பைகளை சேகரித்து, அதை தார் சாலை அமைக்க விற்பனை செய்கிறது. இக்குழுவின் செயல்பாட்டை பிரதமர் மோடி காணொளி வாயிலாக பாராட்டி இருக்கிறார்.நான் கண்ட மாற்றம்'நெகிழி' குப்பை சேகரிப்பு பணியை சாதாரணமாத்தான் துவக்கினோம். ஆனா, யாருமே யூகிக்க முடியாத மனமாற்றம் நிகழ்ந்தது. 'குறிப்பிட்ட பிரிவினர்தான் துப்புரவு பணி செய்யணும்'ங்கிற எண்ணத்தை இந்த பணி உடைச்சது. ஆரம்பத்துல இந்த குப்பைகளை நான் மட்டும்தான் சேகரிச்சேன். என்னைப் பார்த்து கொஞ்சம் கொஞ்சமா ஆட்கள் சேர்ந்துட்டாங்க! மக்களோட மன அழுக்கை கழுவின இந்த விஷயத்துல ரொம்பவே பெருமைப்படுறேன்.'கறைபடா சமூகப்பணி' சாத்தியமா ஜெயந்தி?'சாத்தியமில்லை'ன்னு சொல்ல மாட்டேன்; ஆனா, ரொம்ப கடினம்! ஒரு பெண்கள் குழு, கடனை திருப்பி செலுத்தாம ஏமாத்தப் பார்த்தாங்க; போராடி செலுத்த வைச்சேன். ஒரு 'காசோலை' விஷயத்துல என் மேல பழி; அதை 'பொய்'னு நிரூபிக்க நெருப்பாற்றை கடந்தேன். இஷ்டமானதை செய்றப்போ வர்ற கஷ்டங்களை சமாளிக்கணும்; இல்லேன்னா... கனவு காண நமக்கு தகுதி கிடையாது.ஆசைகள் 1000* மூன்று பிள்ளைகளும் நன்கு படித்து பணிபுரிய வேண்டும்* மழலையர் பள்ளியில் அதிக நேரம் செலவிட வேண்டும்* 'நெகிழி இல்லா திண்டுக்கல்' பார்க்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !