உள்ளூர் செய்திகள்

முதல்வர் பேசுகிறேன்...

வணக்கம். நான் கோமளலக்ஷ்மி; ஜூலை, 2020ல இருந்து சிறப்பு குழந்தைகளுக்கான ஆசிரியர்களை உருவாக்கும் கோவை, இந்திராகாந்தி சிறப்பு கல்வி கல்லுாரியின் முதல்வர். 15 ஆண்டுகாலம் பள்ளி ஆசிரியையா, கல்லுாரி பேராசிரியையா இருந்திருக்கிறேன்.ஆதலால் நான் முதல்வர்!'சுயமரியாதை'ங்கிறது பெரியவர்களுக்கு மட்டுமானது கிடையாது; அது, மாணவர்களுக்கும் உண்டு. ஒரு ஆசிரியர், தன் மாணவர்களோட சுயமரியாதையை தன்னுடைய சுயமரியாதையா நினைக்கணும். அவங்க தோல்விகள்ல தனக்கும் பங்குண்டுன்னு உணரணும். இதை, 'முதல்வரின் தலையாய பண்பு'ன்னு நான் நினைக்கிறேன்.நான் விரும்பும் கல்வி'சிறு துரும்பும் பல் குத்த உதவும்'னு சொல்லிக் கொடுத்த அறக்கல்வி, 'பொருளின் பயன்பாடு முடிந்ததும் துாக்கி எறி'ன்னு சொல்லி தர்ற நுகர்வு கல்வியா மாறிடுச்சு. பொருளாதார முன்னேற்றத்தை மட்டுமே வாழ்க்கையோட அவசியமா கருதாம, அற மதிப்பீடுகளை பள்ளியிலேயும், கல்லுாரியிலேயும் போதிக்கிற கல்விதான் என்னோட விருப்பம்! மாணவர்கள் எனும் உளி!மாணவர்கள்கிட்டே ஒரு விஷயத்தை செய்ய சொல்லிட்டு, அதுக்கான காலத்தை தராம அடிக்கடி போய் அதைப்பற்றி கேட்பேன். இதை சுட்டிக்காட்டி ஒரு மாணவன் சொன்னப்போ, 'சுருக்'குன்னு இருந்தது. அந்த வினாடியே என் அணுகுமுறையை நான் மாத்திக்கிட்டேன்.ஒரு வருத்தம்பிள்ளைகளோட பிறந்தநாள்ல மரக்கன்று நட்டு, அன்னதானம் பண்றதோட பெத்தவங்க மனிதம் நின்னுடக் கூடாது. அன்றாட வாழ்க்கையில மனிதம் ஓர் அங்கமா இருக்கணும். ஆனா, துரதிருஷ்டவசமா 'மனிதாபிமானி' வேஷம் போட்டு சுத்துற நபர்கள் மத்தியிலதான் பிள்ளைகள் வளர்றாங்க! மூன்றாவது கண்நிர்வாகம் சார்ந்த மாற்று முயற்சிகளுக்கு இடம் தராம, 'எதுக்கு மேடம் ரிஸ்க் எடுக்குறீங்க'ன்னு புலம்புற ஆசிரியர்களையும், 'ஆஹா... ஓஹோ'ன்னு கண்மூடித்தனமா என்னை புகழ்ந்து பேசுற ஆசிரியர்களையும் என் மூன்றாவது கண் கண்காணிச்சுட்டே இருக்கும். எதிர்கால இந்தியாமாணவர்களுக்கு எதிர்காலம் மேல நேர்மறை எண்ணங்களே இல்லை; வாழ்க்கையை போர்க்களமா நினைக்கிறாங்க. இதுக்கு ஒரே காரணம், கல்வி சூழல் தர்ற போட்டி மனநிலைதான். இந்த நிலைமை தொடர்ந்தா, எதிர்கால இந்தியா பிரகாசமா இருக்காது.ஒரு நன்றிஇந்த ஊரடங்கை பல பேர் சவுகரியத்துக்கு பயன்படுத்திக்கிட்டாங்க; அதேநேரம், 'எதுவும் நம்மளை முடக்கிடக் கூடாது'ன்னு சிலர் வெளியே வந்தாங்க; உழைப்பு சக்கரத்தை நிற்காம சுழல வைத்த அந்த சிலருக்கு என் நன்றி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !