அன்புள்ள சிஸ்டர்!
கைதியால் தாக்கப்பட்ட கேரள மருத் துவர் மரணத்திற்குப் பின், 'மருத்து வர்களுக்கு பாதுகாப்பு கொடு' கோஷம் ஓங்கி ஒலிக்கும் இக்கணத்தில், பத்து ஆண்டுகளாக சென்னை - புழல், மத்திய சிறையில் ஆண் குற்றவா ளிகளுக்கு செவிலியாக உள்ளார் ச.புவனேஸ்வரி.பணி துவக்கம்: 2008முதல் களம்: ஆரம்ப சுகாதார நிலையம், கனகம்மாசத்திரம், திருவள்ளூர்பதவி: பிரசவ செவிலிதுறை அனுபவம்: 15 ஆண்டுகள்..என் மனம்சட்டத்தால் 'குற்றவாளி'ன்னு தீர்ப்பு எழுதப்பட்ட நபர்களை எந்த முன் தீர்மானமும் இல்லாம அணுகி, அவங்க நிவாரணத்துக்கு உதவுறது என் பணி. நான் சிறைவாசிகளை கொடூரர்களா பார்க்குறது இல்லைன்னாலும், 'போக்சோ' குற்றவாளிகள் மேல எனக்கு பயங்கர கோபம் உண்டு!ஆனாலும், சென்னையில ஆறு வயசு சிறுமியை பலாத்காரம் பண்ணி கொலை பண்ணிட்டு, தன் தாயையும் கொலை பண்ணின நபருக்கும் அக்கறையோடதான் சேவை பண்றேன்! 'பாவம் - புண்ணியம்' பற்றி உங்க பார்வை?'பொய் புகார், பொய் சாட்சியங்கள் மூலமா சில அப்பாவி மனிதர்கள் தண்டிக்கப்பட வாய்ப்பு உண்டு'ங்கிறது என் நம்பிக்கை. இப்படியொரு நிலையை ஏற்படுத்துறவங்க பெரிய பாவம் செய்றாங்கன்னு நான் நம்புறேன்.இப்படி தண்டிக்கப்பட்ட அப்பாவிங்க நன்னடத்தை காரணமா தண்டனை காலம் குறைக்கப்பட்டு விடுதலையாகுற செய்தி கேட்குறப்போ, 'புண்ணியம்' மேல அழுத்தமான நம்பிக்கை வரும். தாயாகும் முன்பே தாயானேன்அப்போ நான் கனகம்மாசத்திரத்துல பிரசவம் பார்க்குற செவிலி. அந்த காலகட்டத்துல எனக்கு குழந்தை பாக்கியம் இல்லாததால மனசுல எப்பவும் ஒரு பாரம் இருக்கும். பிரசவம் பார்க்குற தருணங்கள்ல, சிசுக்களை கையில ஏந்துறப்போ எல்லாம் தாய்மையை உணர்வேன்!நுாற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு குழந்தை பிறந்த செய்தியை சொன்னதுல கிடைச்ச ஆசிர்வாதமோ என்னவோ... இன்னைக்கு எனக்கு ஒரு மகனும் மகளும் இருக்குறாங்க! அம்மாவுக்கு நன்றிசெவிலியர் பயிற்சி நேரம்; காசநோய் பிரிவுல பணியாற்றினப்போ எனக்கும் தொற்று; ஆசைப்பட்ட வேலை இவ்வளவு ஆபத்தானதான்னு பதற்றம் வந்ததும், 'இந்த படிப்பே வேண்டாம்'ங்கிற முடிவுக்கு வந்துட்டேன்.அந்த கணத்துல, 'இந்த தொற்றுல இருந்து நீ மீண்டதும் காசநோயாளிகளை உன்னால நல்லா பராமரிக்க முடியும்'னு அம்மா சொன்னாங்க! 'நாம ஏன் இப்படி யோசிக்கலை'ன்னு அந்த நிமிஷம் ரொம்பவே வருத்தப்பட்டேன். குற்றவாளிகள் உருவாகிறார்களா?இல்ல... தவறான சூழல்களால், வாய்ப்புகளால் உருவாக்கப்படுறாங்க; போதை பழக்கம் இதுக்கு முக்கிய காரணம்.சுருக்: சுகாதாரமா இருக்க வழி சொல்றப்போ சிரிக்கிறது ஆட்கொல்லி நோய்; இதை உணர்ந்திருக்கீங்களா?வாய்ஸ் பபுள்: மனம்தான் முதல் தடுப்பூசி!