திருமதி விவசாயி!
கரும்பு விவசாயத்தில் கணவர் ஈடுபட, வரப்புகளில் உள்ள மூலிகை செடிகளில் இருந்து பல்வேறு மதிப்பு கூட்டுப் பொருட்களை தயாரிக்கிறார் சிவகங்கையைச் சேர்ந்த உஷா.வயது: 40கணவர்: கருப்பையாஉஷா தயாரிக்கிற மதிப்பு கூட்டு பொருட்கள் என்னென்ன?பிரண்டை, துாதுவளை, முடக்கத்தான், கரிசலாங்கண்ணி, கல்யாண முருங்கை, ஆளி விதை, முருங்கை இலை சேர்த்து தயாரிக்கிற இட்லி பொடி என் அடையாளம். உடனடி மூலிகை சூப் மிக்ஸ், சிறுதானிய சப்பாத்தி மிக்ஸ், சிறுதானிய புட்டு மிக்ஸ், சிறுதானிய அடை மிக்ஸும் தயாரிக்கிறேன். என்னோட எல்லா தயாரிப்புக்கும் உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு சான்றிதழ் இருக்கு.சிறுதானியங்களை விவசாயிகள்கிட்டே இருந்து வாங்கிக்கிறேன். மூலிகைகளை நானே உற்பத்தி பண்றேன். சந்தைகள் மற்றும் உணவு கண்காட்சிகள்தான் என் பொருட்களுக்கான வியாபார ஸ்தலங்கள். 100 கிராம் மூலிகை இட்லி பொடி, 65 ரூபாய். 50 கிராம் மூலிகை சூப் பொடி, 50 ரூபாய். என்னோட சமீபத்திய தயாரிப்பு... மூலிகை கிருமிநாசினி.தற்சார்பு வாழ்க்கைஎன்னால என் குடும்பத்துக்கு ஒரு சின்ன வருமானம்; பி.காம்., படிச்சிருக்கிற எனக்கு இந்த தொழில் கவுரவ அடையாளம். காரைக்குடி - தேவகோட்டை சாலையில், 15வது கிலோ மீட்டரில் இருக்கிறது இவரது வளங்காவயல் கிராமம்.