உள்ளூர் செய்திகள்

திருமதி விவசாயி

கணவன் - மனைவி பந்தத்தைப் போன்று நம்பிக்கையை வேராகக் கொண்டது விவசாயிக்கும் நிலத்திற்குமான பந்தம்.'தன்னை வாழ வைக்கும்' என விவசாயி நிலத்தை நம்புகிறான்; 'தன்னை பாதுகாப்பார்' என நிலம் விவசாயியை நம்புகிறது. விவசாய தம்பதியான திருஞானசம்பந்தன் - திருமுருகஞானாம்பாள் பந்தம் கூட இப்படியானதுதான்!இது எங்க கதைபணக்கஷ்டம் காரணமா எங்க நிலத்துல ஒரு பகுதியை வித்துட்டதால, இப்ப எங்ககிட்டே ஏழு ஏக்கர் நிலம்தான் இருக்கு. நெல்லடிச்சு வாழ்ந்த எங்க வீட்டுல, ஒருதடவை அரிசி இல்லாத சூழல்; என் கணவர் 100 ரூபாய் கடன் வாங்கி அரிசி வாங்கிட்டு வந்தார். எனக்கு நல்லா நினைவிருக்கு... அன்னைக்கு நாங்க எல்லாரும் சாப்பிட்டோம்; அவர் மட்டும் 'சாப்பாடு வேண்டாம்'னு சொல்லிட்டு பசியோட படுத்துட்டார். கொஞ்சநாள் அப்படியே ஓடுச்சு! அவரோட 'வெல்டிங்' வேலை வருமானத்தை நிலத்துல போட்டோம். அரிய நெல் ரகமான சொர்ணமசூரியை கேரளாவுல இருந்து 16 கிலோ வாங்கிட்டு வந்து, 130 நாள் இயற்கை விவசாயம் பண்ணினோம்; 1,400 கிலோ மகசூல்! கிலோ 50 ரூபாய்னு விற்பனை பண்ணி எங்க வாழ்க்கையை மீட்டெடுத்தோம்.நாங்க கேட்ட வரத்தை எங்க நிலம் கொடுத்திருச்சு!திருப்பூர் உடுமலையில் இருந்து ஆனைமலை செல்லும் வழியில் 18 கி.மீ. இருக்கிறது இவரின் செல்லப்பம்பாளையம் கிராமம் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !