உள்ளூர் செய்திகள்

முதல்வர் பேசுகிறார்!

பதினேழு ஆண்டு கால ஆசிரியப்பணி அனுபவம் சிவகங்கை, பூவந்தி, மணிமாறன் மெட்ரிக் பள்ளியோட முதல்வர் பொறுப்பை எனக்கு தந்திருக்கு. எல்லா விஷயங்களையும் நேர்மறையா அணுகுற குணம், இந்த சுகன்யா பாலகிருஷ்ணனுக்கு வெற்றிகளை அறிமுகப்படுத்திட்டு வருது! தனி வழி'தமிழ் எழுத்துக்கள் 247யும் மொழியா அணுகி வார்த்தை ஜாலம் புரியுற நம்மால, 26 ஆங்கில எழுத்துக்களை சுலபமா அணுக முடியாதா'ன்னு மாணவர்களுக்கு புரிய வைக்கிற ஆங்கில ஆசிரியை நான்; 'வந்துட்டான்யா... வந்துட்டான்'னு, அசோகர் மரம் நட்ட வரலாற்றை நடிகர் வடிவேலு பாணியில பாடமா நடத்துற சமூக அறிவியல் ஆசிரியையும் கூட; முதல்வரா இருந்தாலும் பாடம் நடத்துறதுல இதுதான் என் பாணி!தலைமை பண்பு'சுழற்சி முறையில வகுப்பு தலைவர் பொறுப்பை எல்லா மாணவர்களுக்கும் தந்து தலைமைப் பண்பை வளர்க்கணும்'ங்கிறது என் கண்டிப்பான உத்தரவு. இதனால, 'நாம எதுக்காக படிக்கணும்'ங்கிற கேள்விக்கு பதில் உணர்ந்து ஒவ்வொருத்தரும் அக்கறையோட படிக்கிறாங்க!நீங்களும் முதல்வர்மனைவி, மருமகள், அம்மான்னு பல பொறுப்புகள்ல இருக்குற என் சக ஆசிரியைகளோட கடமைகளும், சிரமங்களும் எனக்குத் தெரியும்; இதெல்லாம் பணியை பாதிக்காதவகையில எப்படி செயல்படணும்ங்கிற என் அனுபவத்தை அவங்களோட பகிர்ந்துக்கிறேன். 'எல்லா ஆசிரியைகளையும் முதல்வர் பதவியில பார்க்கணும்'ங்கிற விருப்பத்தை என் செயல்கள் மூலமா அவங்களுக்கு உணர்த்துறேன்!பெரும் விருதுசொந்த வேலையா எங்க கிராம பஞ்சாயத்துல கிராம நிர்வாக அலுவலரை பார்க்கப் போனேன். என்னைப் பார்த்ததும் அந்த பெண் அலுவலர் சட்டுன்னு எழுந்து கை குலுக்கி, 'மிஸ்... நான் உங்க மாணவி'ன்னு சொன்ன அந்த தருணம்... எனக்கான விருது!களவு ஜாக்கிரதை'ஆன்லைன்' வகுப்பு நேரங்களைத் தவிர செல்போனையும் உங்க பிள்ளைகளையும் பிரிச்சு வையுங்க; எந்தவகையிலேயும் அவங்க மனசு திருடப்படாம பார்த்துக்க வேண்டியது பெற்றோர்களாகிய உங்க பொறுப்பு!என் விருப்பம்'வயதை அடிப்படையா வைச்சு ஓய்வை நிர்ணயம் பண்ணக்கூடாது'ங்கிறது என் எண்ணம்; 'ஆயுள் இருக்குற வரைக்கும் கல்விப் பணியில இருக்கணும்'ங்கிறது என் விருப்பம்!யோசிக்கணும்இது உயர்ந்த படிப்பு; இது சாதாரண படிப்புன்னு தீர்மானிக்கிறது யாருன்னு மாணவர்கள் யோசிக்கணும்; ஹிந்தி மொழியையும் கத்துக்கணும்; நமக்கான தேவைகள்ல இருக்குற அரசியலைப் புரிஞ்சு தடைகள் கடந்து வாழ்க்கையில ஜெயிக்கணும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !