உள்ளூர் செய்திகள்

பெண்மை என் பெருமை!

கசப்பை எந்தளவுக்கு ஏற்றுக் கொள்கிறோம் என்பதில் இருக்கிறது இனிப்பை ருசிப்பதற்கான தகுதி!வகுத்துக் கொண்ட இலக்கு மீதான உறுதியை பல கசப்பான சூழ்நிலையிலும் தவறவிடாத கோவை, பொம்மனம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியை ஜெ.யுவராணிக்கு இனிப்பை ருசிக்கும் தகுதியை வழங்கியிருக்கிறது காலம்.விரும்பிய துறையில் வாய்ப்பு; வாழ்க்கை வெற்றிதானே ராணி?நான் விரும்பினது கணினி பொறியியல் துறை. எனக்கு அப்புறம் ஒரு தங்கச்சி இருக்குறதால எனக்கொரு வாழ்க்கையை சீக்கிரம் அமைச்சு கொடுத்திடணும்னு அப்பா தேர்வு செஞ்சதுதான் இந்த ஆசிரியர் பணி. 2001ல எனக்கு 19 வயசு; குழந்தைங்க முன்னால ஆசிரியையா நின்னப்போ என்ன செய்யணும்னு தெரியலை. ஆனா, அந்த வாழ்க்கையை ஏத்துக்கிட்டேன்; இப்போ, 'சாராபாய் ஆசிரியர் - விஞ்ஞானி தேசிய விருது 2021'க்கு தேர்வாகி இருக்கேன்!மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஆசிரியர் - விஞ்ஞானி தேசிய கவுன்சில், தொடக்க கல்வி மாணவர்களுக்கு செயல்வழியில் கணிதம், அறிவியல் பாடங்களை சிறப்பாக கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இவ்விருதை வழங்குகிறது. ஆசிரியர் பணி கசந்ததும் இனித்ததும் எப்போது?ஆரம்ப நாட்கள்ல நான் சொல்றதை குழந்தைங்க கேட்கணும்னு கோபத்தோட இருப்பேன். வகுப்புல அம்மாவை நினைச்சு அழுதிட்டு இருந்த பொண்ணுகிட்டே, 'இவங்கதான்டி நம்ம அம்மா; நம்மளை பத்திரமா பார்த்துப்பாங்க'ன்னு இன்னொருத்தி சொன்னா; அந்த கணம் என்னை நான் கசப்பா உணர்ந்தேன். கல்வியாளர் ச.மாடசாமியோட 'எனக்குரிய இடம் எங்கே' புத்தகத்தை படிச்சு உள்ளுக்குள்ள வெளிச்சம் பார்த்த கணத்துல இருந்து இனிப்புதான்!'பெண் சுதந்திரம்' - 21 ஆண்டு பணி அனுபவம் உணர்ந்தது என்ன?நாம வாழ்ற வாழ்க்கை அர்த்தமுள்ளதா இருக்கணும்னு பொதுவா சொல்வாங்க. நம்மளால இன்னொருத்தர் வாழ்க்கையில நல்ல மாற்றம் நிகழ்றதுதான் நம்ம வாழ்க்கைக்கான அர்த்தம்னு நான் நம்புறேன்! சுதந்திரம் என் உரிமை; ஆனா, அதை வைச்சு நான் என்ன சாதிச்சிருக்கேன்; அதுதான் என் தரத்தை தீர்மானிக்கும். நான் என் சுதந்திரத்தை சரியா பயன்படுத்துறேன்!'கற்றல்' சுகமா?'வீழ்ச்சிக்கான வழி'ங்கிறதால என் மாணவர்கள் மனப்பாடம் செய்றதில்லை. எதையுமே புரிஞ்சு படிக்கிறாங்க. பாடங்களை 'அனிமேஷன்' வீடியோக்களா நானே தயாரிச்சு சொல்லித் தர்றேன். பொம்மலாட்ட கலை மூலமா கற்பிக்கிறேன். என் மாணவர்களுக்கு கற்றல்... சுகம்.ஜெ. யுவராணியின் புதுப்புது அர்த்தங்கள்உழைப்பு? - ரத்தம்விருது? - நிழல்மாணவர்கள்? - ஆசிரியர்கள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !