உள்ளூர் செய்திகள்

பெண்மை என் பெருமை!

அடர்ந்த வனத்தின் இருள் நீக்க ஒரு தீக்குச்சி போதும்; பல நுாறு தீப்பந்தங்கள் உருவாகி விடும்! திருவள்ளூர் மாவட்டம் மாதவரத்தைச் சேர்ந்த யாக் ஷினி... தீக்குச்சி!'சிலம்பத்துல சாதிச்சா பள்ளி, கல்லுாரிகள்ல முன்னுரிமை உண்டு. இடஒதுக்கீடு அடிப்படையில அரசு வேலையும் கிடைக்கும்!' - தந்தை சீனிவாசனின் நண்பர் அறிவுரை பகிர, அன்று நான்காம் வகுப்பு மாணவியாக இருந்த யாக் ஷினி, முதன்முதலாக சிலம்பத்தை கைகளில் ஏந்துகிறார்.அடுத்தடுத்த நாட்களில்...'இதெல்லாம் நல்லாவா இருக்கு?' - யாக் ஷினியின் பாட்டி.'நல்லா படிக்க வைச்சு நல்ல இடத்துல கட்டிக்கொடு; இதெல்லாம் எதுக்கு?' - யாக் ஷினி தந்தையின் நண்பர்கள்.இன்று...'அவளை மாதிரி யாராலேயும் சிலம்பம் சுத்த முடியாது; ஆமா... நான்தான் அவளை சிலம்ப பயிற்சிக்கு கூட்டிட்டுப் போவேன்!' - அதே பாட்டி.'உன் பொண்ணு சாதிச்சிட்டாப்பா!' - அப்பாவின் நண்பர்கள். இன்னும் என்னவெல்லாம் மாறிப் போயிருக்கு யாக் ஷினி?என் வெற்றிகளால மாதவரத்துல நிறைய பேர் சிலம்பம் கத்துக்க ஆரம்பிச்சிருக்காங்க; சிலம்ப வகுப்புகள் நிறைய முளைக்க ஆரம்பிச்சிருக்கு! 'இந்த மாற்றம் போதும்'னு நீங்க நினைக்கிறீங்களா?இல்லை; அரசுப்பள்ளி மாணவர்களுக்கும், ஆர்வம் இருந்தும் வறுமையால கத்துக்க முடியாதவங்களுக்கும் இலவசமா பயிற்சி கொடுக்குறேன். அவங்கள்ல சிலபேர், மாவட்ட அளவிலான போட்டிகள்ல தங்கப்பதக்கம் வாங்குறாங்க! சீனிவாசன் - மகேஸ்வரியின் மூத்த மகளான 18 வயது யாக் ஷினி, கல்லுாரி முதலாமாண்டு மாணவி; சர்வதேச அளவில் 5, மாநில அளவில் 10, மாவட்ட அளவில் 20 தங்கப்பதக்கங்களை சிலம்ப போட்டிகளில் வென்றவர்; மாலை நேரங்களில், 50க்கும் அதிகமானோருக்கு சிலம்ப பயிற்சி அளிக்கும் பயிற்சியாளர்; இவரிடம் சிலம்பம் கற்றுக்கொண்டு இவரது தங்கை ரோஷிணியும் சர்வதேச, மாநில மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளில் தங்கம் வென்றிருக்கிறார்.இக்கலை பெண்மையின் மென் இயல்பை சிதைக்குமா?எந்த ஒரு தற்காப்பு கலையும் தன்னம்பிக்கை தருமே தவிர, பெண்மைக்கான குணங்களை மாற்றாது!'எண்ணம் போல் வாழ்க்கை' - இது உண்மையா?'பசங்க கூட இவளை பயிற்சி பண்ண விடுங்க'ன்னு பயிற்சியாளர்கள்கிட்டே அப்பா சொல்லிடுவார். அந்த பயிற்சிகள்ல கிடைச்ச வலிகள்தான், 'காயங்கள் படாத அளவுக்கு நல்லா கத்துக்கணும்'ங்கிற உத்வேகத்துக்கும், என்னுடைய எல்லா வெற்றிகளுக்கும் காரணம்!யாக் ஷினியின் கனவு?யாக் ஷினி சீனிவாசன் ஐ.பி.எஸ்.,சபாஷ்!யாக் ஷினியின் புதுப்புது அர்த்தங்கள்வாய்ப்பு? - விளக்குபெண்? - வீரம்வலி? - ஆசான்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !