உள்ளூர் செய்திகள்

பெண்மை என் பெருமை!

தேவகியின் ஓவியங்கள் எல்லாமே கருப்பு - வெள்ளைதான்! ஏன் இப்படி; வண்ணங்கள்தானே அழகு?எந்தவொரு வண்ணத்தோட அடர்த்தியை குறைச்சாலும் அது வெள்ளையாதான் மாறும்; அடர்த்தி கூடினா கறுப்பாகும். என் ஓவியங்கள்ல நிறைய வண்ணங்கள் இருக்கு! பார்வைகளைப் பொறுத்துதான் அது கண்களுக்குப் புலப்படும்!உங்கள் ஓவியங்களில் பெண்களே நிறைந்திருப்பது ஏன்?அம்மா, அக்கா, தங்கை, காதலி, மனைவி, குழந்தைன்னு எல்லா தகுதிகள்லேயும் ஒரு பெண்ணால தாய்மையை உணர முடியும். அதனால, பெண் எப்போதும் கொண்டாடப்படணும்னு நினைக்கிறேன்!விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த தேவகி கந்தசாமிக்கு வயது 32. கணவர் செல்வேந்திரன். எம்.டெக்., பட்டதாரியான தேவகிக்கு ஆராய்ச்சிகள் மீது ஆசை. காலம் என்பது விரும்பும் வகையில் வாழ யாரை அனுமதித்திருக்கிறது; தேவகியும் விதிவிலக்கல்ல; ஓவியராகிவிட்டார்.'அப்பாவுக்கு உடல்நலம் சரியில்லை; அண்ணன் வெளிநாட்டுல இருக்கிறதால நான் கூட இருந்து அப்பாவை கவனிச்சுக்க வேண்டிய கட்டாயம்; 2015ல் அப்பா தவறிட்டார்!' - தேவகியை ஓவியராக்கியது அப்பாவின் பிரிவும், அதிலிருந்து மீள அவர் எடுத்த இந்த துாரிகையும்; ஆனாலும், தன்னை பலமாக்கியது 'வாசிப்பு' என்கிறார் தேவகி. வாசிப்பு என்னவெல்லாம் செய்யும்?'வீடும் உறவுக்காரங்களும் மட்டும்தான் மொத்தமும்னு உன் அம்மா மாதிரியே வாழ்ந்திடாதே'ன்னு வாசிப்பு புரிய வைச்சது; 'உன் கண்கள் வழியா மட்டும் எதையும் அணுகாதே'ன்னு அதுதான் கத்துக் கொடுத்தது! 'நல்லதோ கெட்டதோ நீயே கத்துக்கணும்; நல்லதா இருந்தா மகிழ்ச்சி... கெட்டதா இருந்தா அனுபவம்!' - வாசிப்பு எனக்கு தந்த இந்த பாடத்தை, பிறக்கப் போற என் குழந்தைக்கு நான் நிச்சயம் சொல்லிக் கொடுப்பேன்!அப்பாவோட மறைவு கனவுகளை கலைச்சிட்டதா வருத்தமிருக்கா?வாழ்க்கை முழுக்க எங்களுக்காக ஓடின அப்பாவை இறுதி காலத்துல ஒரு தாயா இருந்து தாங்கிக்கிற வாய்ப்பு; அந்த திருப்தியை ஒப்பிடறப்போ எந்த கனவுக்கும் மதிப்பில்லை!'சுருக்'குன்னு ஏதாவது...படிக்கிறப்போ, 'எப்போ கல்யாணம்'னு கேள்வி; கல்யாணமானதும், 'எப்போ குழந்தை'ன்னு கேள்வி; குழந்தை பிறந்ததும் 'அடுத்த குழந்தை எப்போ'ன்னு நாலு பேர் கேட்குறது இன்னும் மாறலை; இதுல சுவாரஸ்யம் என்னன்னா, 'அந்த நாலு பேர்'ல மூணு பேர் பெண்கள்!சபாஷ்; உங்கள் பார்வையில் பெண்ணியவாதி?கிடைக்கிற எல்லா வாய்ப்பையும் சரியா பயன்படுத்தணும்; இல்லேன்னா, அதோட விளைவுகள் நமக்கு பின்னால வர்றவங்களை பெருசா பாதிக்கும்; இந்த புரிதல் இருக்குற எல்லாருமே என் பார்வையில 'பெண்ணியவாதி' தான்; அவங்களை வணங்குறேன்.தேவதி கந்தசாமியின் புதுபுது அர்த்தங்கள்!பெண்மை? - முழுமைஅன்பு? - வெளிச்சம்கேள்வி? - அறிவு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !