டிரைவிங் லைசென்ஸ் (மலையாளம்)
'அடிச்சு போட்டா பத்து நாய்கள் சாப்பிடுற அளவுக்கு உடம்பு; உனக்கெல்லாம் அறிவுங்கிறதே கிடையாதா' இப்படி ஒரு நடிகன் கேட்குறான். யாரைப் பார்த்து? குருவில்லா ஜோசப்; என் கணவர்.அரசு உத்தியோகம்; மோட்டார் வாகன ஆய்வாளர். வார்த்தைகளை கொட்டினது பிரபல நடிகர்ங்கிறதால, இந்த அவமானம் எல்லா சேனல்லேயும் நேரடி ஒளிபரப்பாச்சு.மனசு வலியோட வீட்டுக்கு வந்த அவர்கிட்டே, இதைப்பற்றி நான் எதுவுமே கேட்கலை. ஆனா, அவரோட இமேஜை உயர்த்துறதா நினைச்சு அக்கம்பக்கத்துல இருக்குறவங்ககிட்டே அவரைப் பற்றி ஒரு பொய் சொன்னேன். அவர் அமைதியா இருந்தார்.இந்த அவமானத்தை எப்படி நேர்த்தியா கழுவணுங்கிறது என் கணவருக்குத் தெரியும். ஆனாலும், நான்மூக்கை நுழைச்சேன். நடிகரோட ரசிகர்கள் என் கணவரை அடிச்சு துவைச்சாங்க. உதட்டோரம் வழியுற ரத்தத்தை துடைச்சுக்கிட்டே...'சுயமரியாதைங்கிறது விஷம் மாதிரி சார்; அதை மனசோட நிறுத்திக்கணும்; அது தலையில ஏறாம பார்த்துக்கணும்!' - மனம் மாறின நடிகர்கிட்டே என் கணவர் இப்படி சொன்னார். எனக்கென்னவோ அவர் எனக்கு சொன்ன மாதிரியே இருந்தது. சம்பாதிக்கப் போற கணவன் ஆயிரம் அவமானங்களை சந்திக்கலாம். அதுல இருந்து மனைவி அவனை பக்குவமா மீட்டெடுக்கணுமே தவிர, அந்த அவமானத்துக்குள்ளே அவனை இன்னும் ஆழமா அழுத்திடக்கூடாது. நான் உணர்ந்துட்டேன்.