உள்ளூர் செய்திகள்

லூசிபர் (மலையாளம்)

வீட்டுக்குள்ளே வந்ததும் வராததுமா, 'ஜான்வி எங்கே?'ன்னு என் கணவர் பாபி கேட்குறப்போ எல்லாம், அதை பாசத்தோட வெளிப்பாடா நினைச்சேன். அவளுக்குப் பிடிச்சதை தேடித்தேடி அவர் வாங்கிட்டு வர்றப்போ, மனசளவுல ரொம்பவே நெகிழ்ந்தேன்.'ஜான்விக்கு ரொம்ப செல்லம் கொடுத்து அவளை வீணாக்கிடாதீங்க!' - இதுதான், அவர்கிட்டே நான் அடிக்கடி சொல்ற அறிவுரை.ஜான்விக்கு வயசு, 17. ஆனா, அவளோட மாச செலவு, 1.75 லட்ச ரூபாய். 'இந்த வயசுல இவ்வளவு செலவுக்கு என்னடி அவசியம்?'ன்னு நான் கோபப்பட்ட நேரத்துல, பாபி வந்து என்னை சமாதானப்படுத்தினார்; ஜான்வியை காப்பாத்தினார்.ஒருநாள்...ஜான்வி போதை மருந்துக்கு அடிமையாகி இருந்த விஷயம் எனக்குத் தெரிஞ்சது.'இதுக்கு யார் காரணம் ஜான்வி?' - நான் அழுதேன்.'உன் புருஷன் தான்; அவன் கொடுக்குற பாலியல் தொந்தரவும் தாங்க முடியலை; என்னை காப்பாத்தும்மா...'ன்னு ஜான்வி கதறுனா! நான், பாபியோட சட்டையை பிடிச்சேன்.'ஆமா ப்ரியா... நான் தான்; ஜான்வி... உனக்கு மட்டும் தான் பொண்ணு; நான், உன் ரெண்டாவது புருஷன்!' - தன் அரக்க குணத்தை காமிச்சான் பாபி.மறுமணத்துல... 'நல்ல தகப்பனை' தேர்ந்தெடுக்காத என் தப்பு எனக்குப் புரிஞ்சது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !