உள்ளூர் செய்திகள்

நிழல் பேசும் நிஜம் - கப்பேள (மலையாளம்)

நான் ஜெஸ்ஸி; பிளஸ் 2 பெயிலாகி மேல படிக்காம, 'எம்பிராய்டரி' தொழில்ல இருக்குறேன்.சரி... இப்போ, என் வீட்டு சூழலை நீங்க தெரிஞ்சுக்கோங்க. நான் வெளியே போயிட்டு வர தாமதமாகும் போதும், தோழியோட ரகசியம் பேசும்போதும், போன்ல சிரிச்சு பேசும்போதும் எங்கப்பாவோட சந்தேக பார்வையை நான் எதிர்கொண்டே ஆகணும்.ஒருநாள்...'எனக்கு ஸ்மார்ட்போன் வேணும்'னு கேட்டேன். 'அதெல்லாம் முடியாது; இப்ப இருக்குறதே போதும்'னு எரிச்சலா ஒரு பதில். தங்கச்சி... ரொம்ப பாவம்; தெரிஞ்ச பையன் கூட சைக்கிள்ல வந்தாங்கிற காரணத்துக்காக, அம்மாகிட்டேயும் அப்பாகிட்டேயும் சரியான அடி! இந்த சூழல்ல, ஒரு 'ராங் கால்' மூலமா விஷ்ணு அறிமுகமானான். முகம் பார்த்துக்க அவசியமில்லாத அளவுக்கு மனசுல நெருக்கம் உருவாச்சு. எனக்குள்ளே இருந்த வெற்றிடத்தை அவனோட பேச்சு நிரப்புச்சு.வீட்ல என் விருப்பத்துக்கு மாறான சம்பவங்கள் தொடர, விஷ்ணுவை நேர்ல சந்திக்க முடிவு பண்ணினேன். பார்த்தேன்... இன்னும் பிடிச்சது. ஆனா, அதெல்லாம் கொஞ்ச நேரத்துக்குதான்! அவனோட கெட்ட எண்ணத்தை என் மனசு காட்டிக் கொடுத்துடுச்சு. ஆபத்தோட விளிம்புல நான் தப்பிச்சுட்டேன்.இப்போ எனக்குள்ளே ஒரே கேள்விதான்...'எனக்கு இப்படி நடக்க நான் மட்டும்தான் காரணமா?'


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !