நிழல் பேசும் நிஜம்! - சகுந்தலா தேவி (ஹிந்தி)
'இவங்களை போல இருக்கக் கூடாது'ங்கிற எண்ணத்துல உறுதியா இருந்து வாழ்க்கையில உயர்ந்தா, யாருக்கு நன்றி சொல்லணும்?என் அம்மா மாதிரி கணவனுக்கு தொண்டு செய்ற பெண்ணா வாழக்கூடாதுன்னு நினைச்சேன். என் அம்மா மாதிரி சராசரி அம்மாவா இல்லாம என் மகளுக்கு சிறந்த அம்மாவா இருக்க நினைச்சேன். இந்த நினைப்பே என் அம்மாவை என்னை வெறுக்க வைச்சது.இப்போ, நான் கின்னஸ் சாதனை படைத்த கணித மேதை... சகுந்தலா தேவி. ஆனா, என் பொண்ணு 'நான் உன்னை மாதிரி இருக்க மாட்டேன்'னு என்னை வெறுத்து ஒதுக்கிட்டா!இந்த சூழல்ல, நான் ஒதுக்கி வைச்ச என் பூர்வீக வீட்டுக்குள்ளே நுழையுறேன். 'உனக்கு பொண்ணு பிறந்தாதான் என் நிலைமை புரியும்'னு அம்மா சொன்னது, 'ஏன் எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டு பேசாம போறேம்மா'ன்னு அம்மாகிட்ட நான் சண்டை போட்டது எல்லாம் நினைவுக்கு வருது.அம்மாவோட டிரங்க் பெட்டியை துாசி தட்டி திறந்தேன். அதுக்குள்ளே... என் திறமையை புகழ்ந்த நாளிதழ்கள், என் புல்லாங்குழல், அம்மாவோட கருப்பு வெள்ளை புகைப்படம்; கண்கள் கலங்க... பெட்டியில இருந்த அம்மாவோட புடவையை எடுத்து முகர்ந்த வினாடி, 'அம்மா...'ன்னு கதறி அழுதேன்.குற்றவுணர்வு நீங்கின என் மனசு சொல்லுச்சு... 'உன் அம்மாதான் உன் உயர்வுக்கு காரணம்!'