உள்ளூர் செய்திகள்

நிழல் பேசும் நிஜம்

நடன கலைஞர்; திருமணத்திற்கு முன் என் அடையாளம். சமையற்காரி, வீட்டு பணிப்பெண், மருமகள், மனைவி; இதெல்லாம் திருமணத்திற்கு அப்புறம்!அன்னைக்கு எனக்கு மாதவிலக்கு. அவர்கிட்டே சொன்னதும், 'டீ போட்டுட்டியா... இல்லையா'ன்னு கேட்டார்; அவருக்கு அவரோட கவலை! 'நான் போய் டிபன் வாங்கிட்டு வந்துடுறேன்'னு கிளம்புனவரை நிறுத்தி, 'நாப்கின் தீர்ந்துடுச்சு; வரும்போது வாங்கிட்டு வந்துடுங்க'ன்னு சொன்னேன்.தயக்கத்தோட தலையாட்டிட்டுப் போனார்.என் மாமனாருக்கு சட்னியை அம்மியில தான் அரைக்கணும். விறகு அடுப்புலதான் சோறு வடிக்கணும். அவரோட ஆடைகளை வாஷிங் மிஷின்ல போடாம கையால துவைக்கணும். பல் துலக்க பிரஷ்ல பேஸ்ட் வைச்சு, அவர் இருக்குற இடத்துக்கே கொண்டு போய் நீட்டணும்! வேலைக்கு போறதைப் பற்றி பேசினா 'அது வேண்டாம்மா... வீட்ல பொண்ணு இருந்தாத்தான் குடும்பத்துக்கு ஐஸ்வர்யம்'னு சொல்லுவார்.வீட்டு உணவு மேஜையில எப்பவும் எச்சில் மிச்சங்களை பரப்புறது என் கணவரோட வழக்கம். உணவகத்துல நாகரிகமா சாப்பிட்டப்போ சுட்டிக்காட்டினேன்; கோபப்பட்டார். சமையலறை கழிவுநீர் குழாய்ல ஏற்பட்ட பழுதை சரி செய்ய பலதடவை சொல்லியும் அதை வேற்று கிரக பிரச்னையா நினைச்சார். 'அடிமையா இருந்தாத்தான் மனைவியா இருக்க முடியும்'னு புரிஞ்சது. இப்போ நான்... 'நடன கலைஞர்' மட்டுமே!படம்: தி கிரேட் இந்தியன் கிச்சன் (மலையாளம்)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !