இதயத்திருடி
விசாலமான கூடத் தில் கிடத்தப்பட்டி ருந்த அய்யா மெது வாக கண்களைத் திறந்தார். மகன் அழுது கொண்டி ருக்க, மனைவியின் விழிகளுக்குள் ஊடுருவிப் பார்த்தார். ஒரே கேள்விதான்...'யார் அது?''நான் புருசன்னு பாப்பனா; புள்ளைன்னு பாப்பனா...?' - மயிலாத்தா பெருங்குரலெடுத்து அழுதாள். இருபது ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த உள்ளாட்சி தேர்தல். ஓட்டு கேட்க அய்யா தெருவில் இறங்கினால் பெரும் கூட்டம். ஆனால், அந்த தேர்தலில் அய்யாவுக்கு இரண்டு வாக்குகளே கிடைத்தன! அய்யா, மயிலாத்தம்மா, மகன் ராஜேந்திரன் என மூன்று வாக்குகள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், கிடைத்தது இரண்டு. யார் அந்த கறுப்பு ஆடு?அன்றும், 'நான் புருசன்னு பாப்பனா; புள்ளைன்னு பாப்பனா...?' - மயிலாத்தம்மா அழுதாள். இருபது ஆண்டுகளாக மனதை அரித்துக் கொண்டிருக்கும் கேள்வி. உடலோடு நுாலிழையில் ஒட்டிக் கொண்டிருக்கும் அய்யாவின் ஆன்மா துடிதுடித்தது. ஐம்பது ஆண்டுகளாக மயிலாத்தம்மா மீது தான் கொண்டிருக்கும் காதலை எல்லாம் ஒருங்கு திரட்டி கண்களில் தேக்கி பார்த்தார். 'யார்?'மயிலாத்தம்மாவின் கண்களில் இருந்து காதல் கண்ணீராகப் பெருக்கெடுத்து வழிந்தது. அடுத்த கணம்...'நான் புருசன்னு பாப்பனா; புள்ளைன்னு பாப்பனா...?'அவ்வளவுதான்; அய்யாவின் ஆன்மா அவரது உடலில் இருந்து வெளியேறியது.படைப்பு: 'யார்?' சிறுகதைஎழுதியவர்: இரா.முருகவேள்வெளியீடு: ஐம்பொழில்