இதயத்திருடி
பிப்ரவரி 14; 'புதுசா வந்திருக்கிற மேனே ஜர் விடோயராம்; ரொம்ப நல்லவரா இருக்காரு மேம்' என்ற வத்ஸலா...'ஒரு ஸ்டேட்மென்ட்ல நிறைய தப்பாயிருச்சு. 'கரெக் ஷன் ப்ளூயிட்' கொடுத்து மாத்த சொல்லிட்டு, 'இந்தமாதிரி பிகர்ஸ் கரெக்ட் பண்ற வேலை எனக்கும் பிடிக்கும்'னார். 'ஸாரி சார்...'னு நான் சொன்னப்போ, 'பரவாயில்ல... இதை நீயே வைச்சுக்க... என்கிட்டே ஒயிட்னர் நிறைய ஸ்டாக் இருக்கு'ன்னார்' என்றாள். 'வத்ஸலா... ஜாக்கிரதையாக இரு' என்றேன். அவனை தேன்பொறியில் சிக்க வைத்து மெய் மறந்த தருணத்தில் உயிரைப் பறிக்கும் செயல் திட்டம் எனக்குள் உருவாகத் துவங்கியது. மார்ச் 8; மேனேஜர் விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல். மருத்துவமனையில் தாயில்லாத அவரது பெண்ணைப் பார்த்ததும் என் கொலைவெறி சிறிது சிறிதாக தணியத் துவங்கியது. ஆண்வர்க்கம் எமக்கெதிராக வன்முறைகளைப் பிரயோகித்தாலும், எம்மினத்தை கொச்சைப்படுத்தி அடக்கி ஆக்கிரமித்தாலும், யாம் அனைத்தையும் மன்னித்து நல்லதையே செய்வோம். அது எங்கள் ஈர மனம். 'இன்னா செய்தார்க்கும் நன்னயம் செய்யும் உயரிய குணம் படைத்தவள் பெண்' என்பதை நிரூபிக்க மகளிர் தினத்தில் ஒரு வாய்ப்பு கிடைத்ததாய் உணர்ந்தேன். 'சிஸ்டர்... என்னோடதும் ஏபி நெகட்டிவ் குரூப்தான்' என்றேன்.படைப்பு: 'பெண் முகம்' சிறுகதைஎழுதியவர்: சித்ரூபன்வெளியீடு: சுவாசம்