"தோள்பட்டை வலிக்கு இருதய நோய் காரணமா
மூட்டு வலி சில நாட்களுக்கு முன் விபத்தில் முழங்கால் மூட்டு விலகி, காலுக்கு ரத்தம் செல்வது குறைந்தது. பின், மூட்டு சீரமைக்கப்பட்டாலும், இணைப்பு நார்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. ஆப்பரேஷன் செய்ய டாக்டர்கள் கூறுகின்றனர். ஆப்பரேஷன் இன்றி சரிசெய்ய முடியாதா?உங்களுக்கு ஏற்பட்ட முழங்கால் மூட்டின் காயம் தீவிரமானது. ரத்தநாளங்களில் காயம் ஏற்பட்டு உள்ளதா என 'டாப்ளர் ஸ்கேன்' செய்து உறுதி செய்தபின் எந்த சிகிச்சையும் மேற்கொள்ளுங்கள். துண்டிக்கப்பட்ட இணைப்பு நார்களை சீரமைக்க திறந்தவெளி அறுவை சிகிச்சை தேவை இல்லை. நவீன தொழில் நுட்பத்தில் மூட்டு நுண்துளை சிகிச்சையில் இதை செய்யலாம்.சமீபத்தில் கீழே விழுந்ததில், தோள் மூட்டினில் 'ரொட்டேட்டர் கப்' (கீணிtச்tணிணூ இதஞூஞூ) கிழிந்து விட்டது. என்னால் தோள்பட்டையை உயர்த்த முடியவில்லை. இதற்கு சிகிச்சை உள்ளதா?கீழே விழுந்து ரொட்டேட்டர் கப்பில் காயம் ஏற்பட்டால், கிழிந்த பகுதியை இணைத்து தைத்தால் மீண்டும் தோள்பட்டையை நன்றாக உயர்த்த முடியும். நவீன தொழில்நுட்பத்தில் இதற்கென்று சில சிகிச்சை முறைகள் வந்துள்ளன. மருத்துவரிடம் ஆலோசித்து இதற்குரிய சிகிச்சை பெறுங்கள்.எனக்கு வயது 52. இரு மாதங்களாக தோள் பட்டையில் வலி உள்ளது. ரத்தஅழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளது. சமீபத்தில் இருதய நோயும் உள்ளதாக கண்டறியப்பட்டது. இருதய நோயால் தோள் பட்டை வலி ஏற்படுமா?தோள்பட்டை வலிக்கு பல காரணங்கள் உள்ளன. தோள் மூட்டினில் உள்ள நோயால் வலி உண்டாகும் போது, பொதுவாக தோள்மூட்டினை முழுமையாக அசைக்க முயலும் போது வலி அதிகமாகும். வலியின் தன்மை மாறாமல் இருந்தால் அதற்கு தோள்மூட்டைத் தவிர வேறு காரணங்கள் இருக்க வாய்ப்புண்டு. இருதயத்திலோ, கழுத்திலோ பிரச்னை இருந்தாலும் தோள்பட்டையில் வலி உணரலாம். அதை 'ரெப்பர்டு பெயின்' (கீஞுஞூஞூஞுணூஞுஞீ கச்டிண) எனக் கூறுவர். நீங்கள் மருத்துவரிடம் ஆலோசித்து வலிக்கு காரணம் இருதயமா, தோள்பட்டையா என உறுதி செய்து, சிகிச்சை எடுக்கவும்.- டாக்டர் கே.என்.சுப்ரமணியன்,மதுரை. 93442-46436