சமையல் எண்ணெயை பயன்படுத்துவது எப்படி?
எனது வயது, 46. உடல் பரிசோதனைக்காக டாக்டரிடம் சென்றால், ஏதாவது சொல்லி விடுவாரோ என்று பயமாக உள்ளது; இதுவரை செல்லவில்லை. இது சரியா?-எஸ்.சந்திரகுமார், மதுரைஇது மிகவும் தவறு. இந்தியர்கள் ஒவ்வொருவரும், 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை டாக்டரிடம் சென்று, ஒரு அடிப்படை பரிசோதனையை அவசியம் செய்து கொள்ள வேண்டும். ரத்தஅழுத்தம், ரத்தம், சிறுநீர், மார்பக எக்ஸ்ரே, வயிறு அல்ட்ரா சவுண்ட் மற்றும் தேவையெனில் எக்கோ, டிரெட் மில் பரிசோதனைகள் உள்ளடங்கும்.இதில் உயர் ரத்தஅழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் வேறு ஏதேனும் கோளாறு இருந்தால், எளிதில் கண்டறிய முடியும். இதன் முக்கியத்துவம் என்னவென்றால் இதை கண்டறிந்து, வாழ்வியல் மாற்றத்தையும், தேவையெனில் மருந்துகளையும் கடைபிடித்தால், உடல் உள்ளுறுப்புகளின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.நவீன மருத்துவத்தில், வியாதி வந்தபின் சரி செய்வதை விட, வருவதற்கு முன்பே வியாதிகளின் சிறு, சிறு அறிகுறிகளைக் கண்டறிந்து, அறவே தடுக்க முடியும். எனவே நீங்கள் பயப்படாமல், டாக்டரிடம் சென்று, அடிப்படை மருத்துவ பரிசோதனைகளை செய்து கொள்ளுங்கள்.எங்கள் வீட்டில் தீபாவளி பலகாரம் செய்த எண்ணெயை மீண்டும் பயன்படுத்தி, அப்பளம், வடகம் பொரித்தனர். இதில் தவறு உள்ளதா?-கே. கார்த்திகேயன், காரைக்குடிசமையலுக்கு சிறிதளவு எண்ணெயை பயன்படுத்துவதே சிறந்த உணவுப் பழக்கம். இருக்கும் சமையல் எண்ணெய் வகையில் ஆலிவ் எண்ணெய், சூரியகாந்தி, நல்லெண்ணெய், தவிட்டு எண்ணெய் ஆகியவை சிறந்தவையாக கருதப்படுகிறது. இவற்றையும் மாதம் ஒருமுறை மாற்றி, மாற்றி பயன்படுத்துவது நல்லது. ஒருமுறை பொரித்த எண்ணெயை பயன்படுத்தி, மறுமுறையும் பயன்படுத்தினால், அது மிகக்கொடூரமாக, ரத்தநாளங்களை பாதிக்கக் கூடும். தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் பொரித்த உணவை உண்டாலும், அதற்கு பயன்படுத்திய எண்ணெயை மறுபடியும் பயன்படுத்தி உணவை தயாரிக்கக்கூடாது.டாக்டர் சி.விவேக்போஸ்மதுரை.