நெஞ்செரிச்சலை விரட்டும் மல்லி
கொத்தமல்லியில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயில், வைட்டமின் ஏ, சி மற்றும் கே அதிகளவில் நிறைந்துள்ளது. கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், ஜிங் சத்துள்ள கொத்தமல்லி, தோல் வியாதிகளை குணப்படுத்தும். சிறுநீரை தடையின்றி வெளியேற்ற இது உதவும். காய்ச்சல், நாக்கு வறட்சி, வாந்தி, இதய பலவீனம், மயக்கம், வயிற்றுப் போக்கு, நெஞ்செரிச்சல், மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல், வறட்டு இருமல் போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கிறது. கல்லீரலை பலப்படுத்தவும், ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையை குறைக்கவும், ரத்த அழுத்தத்தை சீராக வைக்கவும் உதவுகிறது. வாய் நாற்றத்தை தவிர்க்க, பல் வலி, ஈறு வீக்கம் குறைய உதவுகிறது.