உள்ளூர் செய்திகள்

 நவீன கம்பியில்லா பேஸ் மேக்கர் அறிமுகம்!

இதய சிகிச்சையில், 'பேஸ் மேக்கர் தேவைப்படும் நோயாளி களுக்கு, பாதுகாப்பான அம்சமாக புதிய இரட்டை அறை கம்பியில்லா பேஸ் மேக்கர், -ட்யூவல் சேம்பர் லெட்லெஸ் பேஸ் மேக்கரை, தமிழகத்தில் முதன்முறையாக அறிமுகப்படுத்தி உள்ளோம். தற்போது வழக்கத்தில் உள்ள பேஸ் மேக்கர்கள், பல ஆண்டுகளாக லட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்றி உள்ளன என்றாலும், அறுவை சிகிச்சை செய்து, தோலுக்கு அடியில் மின் கம்பிகள் பொருத்தும் போது, நாளடைவில் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. மின் கம்பி இடப்பெயர்வு சார்ந்த சில சவால்களும் இதில் உள்ளன. இந்த நவீன கம்பியில்லா பேஸ் மேக்கரில், இது போன்ற பிரச்னைகள் எதுவும் கிடையாது. என்ன சிறப்பு இரட்டை அறை கம்பியில்லா பேஸ் மேக்கரை் பொருத்தும் போது, இரண்டு சிறிய தானியங்கி சாதனங்களை, நேரடியாக இதயத்திற்குள் பொருத்துகிறோம். இவற்றில் ஒன்று, வலது ஏட்ரியம் எனப்படும் இதயத்தின் வலது மேல் அறையிலும்; மற்றொன்று, வலது வென்ரிக்கிள் எனப்படும் வலது இதய கீழ் அறையிலும் பொருத்தப் படுகின்றன. இவை இரண்டும் ஒன்றுக்கொன்று கம்பியில்லா முறையில் தொடர்பு கொண்டு, இதயத் துடிப்பை இயல்பாக வைத்திருக்க உதவுகின்றன. இந்த புதிய தொழில்நுட்பத்தை உபயோகித்து, இதயத் துடிப்பு முழுதுமாக தடைபட்ட, பல உடல்நல பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட, 80 வயது நோயாளிக்கு, முதன்முறையாக கம்பியில்லா இரட்டை அறை பேஸ் மேக்கரை பொருத்தி உள்ளோம். தொற்று அபாயம் மற்றும் பலவீனத்தால், இந்த நோயாளிக்கு பாரம்பரிய சிகிச்சையை மேற் கொள்ள இயலவில்லை. எனவே, கம்பியில்லா அணுகுமுறை ஓர் உயிர்காக்கும் மாற்றாக அமைந்தது. கருவியைப் பொருத்தும் பணி காலில் உள்ள ஒரு சிறிய துளை வழியாக மேற்கொள்ளப்படுகிறது. ஒரே நாளுக்குள், தன் இயல் பான நடவடிக்கை களுக்கு நோயாளி திரும்ப முடியும். 70 வயதிற்கு மேற்பட்ட, பல் வேறு உடல் சிக்கலான கோளாறுகள் உள்ளவர்களுக்கு, இது ஒரு புதிய நம்பிக்கையை தருகிறது . நன்மைகள் குறைந்தபட்ச ஊடுருவல் கொண்டது என்பதால், பொருத்துவது சுலபம். மின் கம்பிகள் தொடர்பான அபாயங்களை இது குறைக்கிறது. நீண்ட கால பாதுகாப்பை தருகிறது. இந்த புதுமையான தொழில்நுட்பம், நோயாளிகள் அதிக சுதந்திரத்துடனும், குறைவான மருத்துவக் கட்டுப்பாடு களுடனும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவு கிறது. டாக்டர் ஏ.எம்.கார்த்திகேசன், இதய மின் செயல்பாடு சிறப்பு மருத்துவர், அப்பல்லோ மருத்துவமனை, சென்னை 99622 52500 consult@drkarthigesanclinic.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !