எண்ணெய் குளியல்!
எஸ்.சந்திரமோகன் சிவகங்கை: தீபாவளியையொட்டி, இதய நோயாளிகளும் எண்ணெய் பலகாரங்களை உண்ண வேண்டியுள்ளது. அன்றைய நாளில் எண்ணெய் குளியல் போடலாமா?மற்ற நாட்களில், 99 சதவீதம் நம் உணவுப் பழக்கத்தை சரியாக கடைபிடித்துவிட்டு, பண்டிகை காலங்களில் நாம் விரும்பிய உணவை எடுப்பதால், உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அதுபோல, தீபாவளிக்காக உடலில், எண்ணெய் தேய்த்துக் குளிப்பதும் தவறில்லை. எனவே, நீங்கள் தாராளமாக எண்ணெய் தேய்த்து குளித்து, குடும்பத்துடன் குதகலமாக தீபாவளியை கொண்டாடுங்கள்.