சரும நச்சு நீக்கும் உப்பு!
வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் உப்புக்கு மருத்துவப் பயன்கள் நிறைய இருக்கின்றன. '÷சாடியம் குளோரைடு' எனப்படும் உப்பில் இருக்கும் கனிமங்கள், மனித உடலுக்கு தேவையான சத்துக்களை தருகின்றன. அது தவிர, வெளிப்புறமாக பயன்படுத்தும்போதும், உப்பு, நல்ல பயன்களை அளிக்கிறது.அடிபட்டு, ரத்தம் கட்டிய இடங்களில், உப்பு ஒத்தடம் கொடுத்தால் ரத்தக்கட்டு குறையும். உப்பை ஒரு பருத்தித்துணியில் இட்டு, அடுப்பில் சூடாக்கி, ரத்தக்கட்டில் சூடு படும் வகையில் ஒத்தடம் கொடுத்தால், வீக்கம் குறையும்.முடிகொட்டும் பிரச்னை இருப்பவர்கள் முதலில் ஷாம்பு உள்ளிட்டவை மூலம் முடியை சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும். பின்னர், சிறிதளவு உப்பை தலையில் தேய்த்து, 10 நிமிடம் 'மசாஜ்' செய்து கழுவிட வேண்டும். வாரத்திற்கு இரண்டு முறை இப்படி செய்து வந்தால் முடி கொட்டுவது குறையும்.தலையில் உள்ள இறந்த செல்களைத் தான் பொடுகு என்கிறோம். அது தலையில் போதுமான ரத்த ஓட்டம் இல்லாததால் ஏற்படுகிறது. தலையில் ரத்த ஓட்டத்தை ஏற்படுத்தி பொடுகை அழிப்பதில், உப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. வெயில் காலங்களில் தலையில் வியர்த்து அதிக எண்ணைப் பசையுடன் காணப்படும்.அந்த நேரங்களில் நீங்கள் பயன்படுத்தும் ஷாம்புவில் ஒரு தேக்கரண்டி உப்பைக் கலந்து தலைக்கு குளித்தால் சிறந்த பலன் கிடைக்கும். மூன்று தேக்கரண்டி உப்புடன் சிறிதளவு தேங்காய் கலந்து சருமத்தில் தேய்த்து நன்றாக கழுவினால், இது சிறந்த 'ஸ்க்ரப்' ஆக செயல்படும்.உப்பில் இருக்கும் சில கனிமங்கள், சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவதுடன் சருமத்தை மென்மையாய் வைத்திருக்கவும் உதவுகின்றன. சருமத்துளைகளில் உள்ள அழுக்குகளை நீக்கி, பருக்கள் வராமல் தடுக்கின்றன. அதோடு சருமத்தில் சுரக்கும் எண்ணெயையும் கட்டுப்படுத்தும்.நான்கு தேக்கரண்டி தேனுடன் இரண்டு தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொண்டு, நன்றாக பேஸ்ட் பதத்திற்கு வந்ததும், அதை 'பேஸ் மாஸ்க்' போல முகத்தில் தடவி, 10 நிமிடம் கழித்து கழுவி விடலாம். இதன் மூலம் முகம் பொலிவு பெறும். குளிக்கும் போது வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பு கலந்து குளிக்கலாம். இதனால் சருமத்தில் ஒட்டியிருக்கும் அழுக்குகள், நச்சுக்கள் அழிக்கப்படும். உப்பில் இருக்கும் கனிமங்களால், சருமம் வறட்சியிலிருந்து மீட்கப்படும். நோய்த்தொற்று இன்றி, அதிக தூக்கத்தினாலோ அல்லது குறைந்த தூக்கத்தினால் கண்கள் வீங்கியிருந்தால் ஒரு டேபிள் ஸ்பூன் உப்புடன், இரண்டு டேபிள் ஸ்பூன் வெதுவெதுப்பான தண்ணீரை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். அந்த தண்ணீரில் பஞ்சை நனைத்து, அதை கண்களில், 10 நிமிடம் வைத்திருந்தால் வீக்கம் குறைந்துவிடும்.