உள்ளூர் செய்திகள்

எதிர்ப்பு சக்தியின் நிறம் சிவப்பு

உலகம் முழுதும், 'கொரோனா' பாதித்து உள்ளது. தொற்று பாதிப்பை, நீங்கள் எப்படி அணுகுகிறீர்கள்?தொற்று பாதித்து இறப்பவர்களின் எண்ணிக்கையை பார்க்கும் போது, மிகவும் வேதனையாக உள்ளது.வாய்ப்பு கிடைத்து, மனித உடலுக்குள் வைரஸ் கிருமி நுழைந்ததும், நம் செல்களில் இருக்கும் புரதச் சத்தை பயன்படுத்தி, பல்கி பெருக ஆரம்பிக்கும்.இதை எதிர்த்து போராடும் விதமாக, நோய் எதிர்ப்பு அணுக்களை உடல் உருவாக்கும். அப்படி உருவாகும் எதிர்ப்பு அணுக்கள், வைரசை அழிக்க முடியாத சூழலில், வைரஸ் பெருகுவதை தடுக்கும் விதமாக, உடலின் வெப்பநிலையை அதிகரிக்கச் செய்யும். வைரஸ், மனித உடலுக்குள் சென்ற சில நாட்களுக்குள் இது நடக்கும்.

இந்த நிலையில் நாம் செய்ய வேண்டியது என்ன?

அயர்ச்சி, தொண்டையில் லேசான வலி, தொண்டை வறட்சி, இருமல், உடல் வலி போன்ற அறிகுறிகள் மிதமாக உணரத் துவங்கியவுடன், நம் உடல் வெப்பநிலையை நாமே அதிகரிக்கச் செய்ய வேண்டும்.தங்கள் உடலில், சில அசாதாரண நோய் அறிகுறிகள் தெரிய ஆரம்பித்ததும், சூரிய ஒளியில் சென்று படுத்து, தங்கள் உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும் பழக்கம், விலங்குகளிடம் உண்டு.

இதை நாம் எப்படி செய்வது?

ஒவ்வொரு, 15 நிமிடங்களுக்கு ஒரு முறை, அரை டம்ளர் வெந்நீர், குடிக்க முடிகிற சூட்டில் குடிக்க வேண்டும். தொடர்ந்து இப்படி செய்வதால், வியர்க்க ஆரம்பிக்கும். இது, உடல் வெப்பம் அதிகரித்து இருப்பதற்கான அறிகுறி.உடலின் வெப்பநிலை, 1 டிகிரி சென்டிகிரெட் வரை அதிகரிக்கும். இதைத் தொடர்ந்து, 48 மணி நேரம் செய்யும் போது, உடலினுள் வைரஸ் பரவல் முழுமையாக கட்டுப்படுத்தப்படும்; இதனால், உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, வைரஸ் முற்றிலும் செயலிழக்கும்.

வியர்வை சொட்ட சொட்ட உடற்பயிற்சி செய்வதால், இதே பலன் கிடைக்குமா?

உடற்பயிற்சிக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை; இதை, உலகம் முழுதும் வெளியான, நிறைய மருத்துவ அறிக்கைகள் உறுதி செய்கின்றன. தொற்று பாதித்த இடங்களுக்கு செல்பவர்கள், நேரடியாக களப் பணியில் இருப்பவர்கள், அங்கிருந்து வந்ததும், அடுத்த, 48 மணி நேரத்திற்கு, வெந்நீர் தெரபி செய்தால், உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, வைரஸ் அழிக்கப்பட்டு விடும்.நம்முடைய அடிப்படையான நோக்கம், எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவது. தொற்று ஏற்பட்டு இறப்பதற்கு காரணம், எதிர்ப்பு சக்தி இல்லாதது தான்!

எதிர்ப்பு சக்தி குறித்த உங்களின் ஆராய்ச்சி அனுபவம்?

முதுநிலை மருத்துவ பயிற்சி பெற்ற போது, என்னுடைய அடிப்படை ஆராய்ச்சி, தொற்றும், நோய் எதிர்ப்பு சக்தியும் பற்றியது தான்!நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியின் நிறம், சிவப்பு. அதனால் தான், 'தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், டாக்டரிடம் செல்ல வேண்டியதில்லை' என்றனர்.ஆப்பிளை வெட்டினால், வெட்டுப்பட்ட பகுதியில் சிவப்பாக மாறும்; அதில், அந்த அளவு இரும்புச் சத்து உள்ளது. இரும்புச் சத்து அதிகம் இருந்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, அடுத்து, ஜிங்க், அமினோ அமிலங்கள், வைட்டமின் - சி சத்து தேவை; இவை அனைத்தும் இயற்கையிலேயே கிடைக்கிறது.முளை கட்டிய பயறில் அமினோ அமிலம், எலுமிச்சையில் வைட்டமின் - சி, ஆப்பிள், கறுப்பு உலர் திராட்சையில், இரும்புச் சத்து, பப்பாளி, தர்ப்பூசணி இவற்றின் விதைகளில், 'ஜிங்க்' போன்ற சத்துகள் உள்ளன.இவற்றை இயற்கையாகவோ அல்லது இவற்றை கொண்டு தயாரான இணை உணவுகளையோ சாப்பிட்டால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.இந்த சத்துகள் நிறைந்த மாத்திரைகளை கொடுத்ததால், வைரஸ் தொற்று காரணமாக ஏற்படும் தொண்டை புண், சைனஸ் உட்பட, பல பிரச்னைகளுக்கு தீர்வு கிடைத்துள்ளது. குறிப்பாக, என் அனுபவத்தில், குழந்தைகள் நலம் பெற்று உள்ளனர். குழந்தைகளின் பெற்றோரிடம் நான் சொல்வது, குழந்தைக்கு தொண்டை வலி, சைனஸ், மூக்கடைப்பு, லேசான காய்ச்சல் என்றதும், பதற்றப்பட வேண்டாம். தொண்டையில், ஏற்கனவே நிறைய வைரஸ் இருக்கும்; ஐஸ் கிரீம், குளிர்பானம் தருவதால், வைரஸ் வீரியம் பெற்று, பெருக ஆரம்பிக்கும். ஐஸ் சாப்பிட்ட பின், வெந்நீரை குடிக்க கொடுப்பதால், இது சரியாகும்.

கொரோனா தொற்றுக்கு இது எந்த அளவில் பலன் தரும்?

தொற்று ஏற்படும் வாய்ப்பு இருப்பவர்களை தனிமைப்படுத்தி, குறிப்பிட்ட நாட்களுக்கு பின், பரிசோதனை செய்கிறோம். காரணம், வைரஸ் பல்கி பெருகி, அதை எதிர்க்க, எதிர்ப்பு அணுக்களும் பெருகும் போது தான், தொற்று ஏற்பட்டு இருப்பதை உறுதி செய்ய முடியும்; அதற்குள் மிகவும் தாமதமாகி விடும். பதிலாக, லேசான அறிகுறிகள் உள்ள போதோ அல்லது தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கும் என்று சந்தேகம் இருந்தாலோ, வெந்நீர் குடிக்க ஆரம்பிக்க வேண்டும்.அப்படி செய்தால், நோய் எதிர்ப்பு சக்தி பெருகி, ஒருவர் கூட இறக்கும் நிலை வராது; இது, என் உறுதியான ஆலோசனை.

'பிளாஸ்மா தெரபி' பற்றி உங்கள் கருத்து என்ன?

தொற்று பாதிப்பு, சிலருக்கு விரைவில் குணம் ஆவதற்கு காரணம், அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக இருப்பது.பிளாஸ்மா சிகிச்சை தருவது பற்றி, எனக்கு ஆட்சேபனை இல்லை; ஆனால், அதற்கு முன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யலாமே! சர்க்கரை கோளாறு, இதய நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற, நீண்ட காலமாக உடல் கோளாறு இருப்பவர்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. 'டிப்தீரியா' தொற்று அதிகம் பாதித்த, 1980ல், 'ஆன்டிபயாடிக்' மருந்துகள் இல்லை; அப்போது, வெந்நீர் தெரபி செய்தே, நிறைய பேர் குணமடைந்தனர். முறையான உணவுப் பழக்கம், ஒழுக்கமான வாழ்க்கை முறை போன்ற காரணத்தால், சிலருக்கு நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக இருக்கும்.

குழந்தை பருவத்தில் போடப்படும், 'பி சி ஜி' தடுப்பு ஊசி தான், இந்திய மக்களின் நோய் எதிர்ப்பு சக்திக்கு காரணமாக கூறப்படுவது பற்றி?

இந்த செய்திகளை படித்தேன். இது ஒரு தடுப்பு மருந்து என்பதால், எதிர்ப்பு சக்தியை துாண்டுகிறது. இயற்கையிலேயே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வழிமுறை கள் உள்ள போது, அவற்றை பின்பற்ற வேண்டும் என்பதே என் விருப்பம்.டாக்டர் பி.பி தேவன்,காது, மூக்கு மற்றும் தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர்,மங்களூரு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !