அந்த பெண் கண்ணாடி முன்னால் நின்றாள்.கீமோதெரபி சிகிச்சை தொடங்கிய மூன்றாவது வாரம்.அவள் விரல்கள் தலைமுடியைத் தொடும் போதே,அது கையோடு குவியலாக வந்தது,தொடர்ந்து விழுந்தது.தலையில் முடியிழந்த அந்த தருணத்தில் அவருக்குத் தோன்றியது —“நான் இனி யாருக்கும் அழகாகத் தெரிய மாட்டேனோ?என் குழந்தைகள் என்னைப் பார்த்து பயப்படுவார்களோ?”சிகிச்சை தந்த வலியை தாங்கிக் கொண்டார் ஆனால் அவரால் தன் தலை முடி உதிர்வை தாங்கிக் கொள்ள முடியவில்லை.புற்றுநோய் சிகிச்சையின் போது, கீமோதெரபி எனும் பயணத்தில் முதல் இழப்பு தலைமுடிதான், அது உடல் வலியை தராது ஆனால் அது மனவலியைத்தருகிறது.தனக்கு தானே ஆறுதல் சொல்லிக் கொண்டாலும் அந்த ஆறுதல் கண்ணாடி முன் நிற்கும் போது உடைந்து போகிறது.பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்கள், குழந்தைகளுக்கு கூட, தன்னம்பிக்கையை குறைக்கிறது.அந்த பெண்ணும் அப்படித்தான் உறவை நட்பை சந்திக்க விரும்பவில்லை தவிர்க்கமுடியாமல் சந்தித்தாலும் கண்கள் தரையைப் பார்த்தன.அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் அவரது கைக்கு மருத்துவமனை ஊழியர் மூலமாக ஒரு பெட்டி கிடைத்தது.அதன் மீது எழுதப்பட்டிருந்தது:“Gift Hair, Gift Confidence” - A Cherian Foundation Initiativeஅவள் குழப்பத்துடன் திறந்தாள்.அந்த பெட்டிக்குள், அற்புதமாக தயாரிக்கப்பட்ட ஒரு விக்.அவள் அதை மெதுவாக அணிந்தாள்.கண்ணாடியில் பார்த்தாள்.நீண்ட நாட்களுக்கு பிறகு, கண்ணாடி பார்த்து சிரித்தாள்.“இந்த முடி யார் கொடுத்தது?”“ஒரு சிறுமி, தன்னுடைய தலைமுடியை வெட்டி, தானமாக கொடுத்தாள்.அந்த சிறுமி கொடுத்தது தானமல்ல தனக்கான நம்பிக்கையை என்று அவர் உணர்ந்த தருணத்தில் அன்பால் கண்ணீர் வழிந்தது.விக்கை அணிந்த அடுத்த நிமிடமே அவர் உற்சாகத்தையும்,கண்ணியத்தையம் பெற்றார்.அந்த அன்பை,நம்பிக்கையை ஆயிரக்கணக்கான பேர்களுக்கு தருவதுதான் செரியன் அறக்கட்டளையின் நோக்கம்.சாதாரண தலைமுடி அது எவ்வளவு பெரிய சந்தோஷத்தையும் மரியாதையையும் தருகிறது என்பதை கடந்த வாரம் சென்னை அடையார் கேன்சர் இன்ஸ்டியூட்டிற்கு வந்தவர்களுக்குதான் தெரியும்.புற்றுநோயின் பயமும் வலியும் நிரம்பிய இடமாக கருதப்படும் சென்னை அடையார் புற்றுநோய் நிறுவனத்தின் வளாகம், கருணை, தைரியம், நம்பிக்கை ஆகியவற்றால் ஒளிர்ந்தது. காரணம் செரியன் அறக்கட்டளை நடத்தும் “Gift Hair, Gift Confidence” (GHGC) என்ற புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விக் தானமாக வழங்கும் நிகழ்ச்சியால்.இந்த நிகழ்ச்சி ஒரு சாதாரண விழாவல்ல — அது ஒரு மனிதாபிமான இயக்கம். மருத்துவ சிகிச்சைக்கு அப்பாற்பட்டு, நோயாளிகளின் உற்சாகம், கண்ணியம், வாழ்நம்பிக்கை ஆகியவற்றை மீண்டும் எழுப்பும் ஒரு வாழ்வியல் கொண்டாட்டம்.மருந்தைத் தாண்டிய குணமளிப்புஇந்த விழாவின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றவர் லூக் கௌட்டினோ, பேசுகையில் ,நோயை எதிர்த்து போராடும் மன வலிமையை தருகிறது,” என்றார்.2014-ல், தனது பாட்டியை புற்றுநோயால் இழந்த நினைவாக, ஜார்ஜ் சேரியன் இந்த யோசனையை முன்வைத்தார். அந்த துயரமான இழப்பு, கருணையாகவும், மனிதாபிமானமாகவும் மாறியது. மருத்துவமனையில் முடி உதிர்வால் நம்பிக்கை இழந்த நோயாளிகளுக்கு இலவசமாக தரமான விக்குகளை வழங்கும் முயற்சி அதிலிருந்து பிறந்தது.2023-இல், இந்தக் கனவு ஒரு பெரும் இலட்சியமாக மாறியது. 1,600-க்கும் மேற்பட்ட விக்குகள் இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள நோயாளிகளிடம் சென்றடைந்துவிட்டன.பிரச்சாரத் தலைவர், சாரா பெஞ்சமின் சேரியன் கூறுகையில்,“Gift Hair Gift Confidence என்பது ஒரு நிகழ்ச்சி மட்டும் அல்ல, அது ஒரு மனிதாபிமான இயக்கம். ஆரம்பத்தில் ஒரு மருத்துவமனையில் தொடங்கிய இந்த முயற்சி, இன்று நாடு முழுவதும் பரவியுள்ளது. தற்போது எங்களிடம் 25 கூட்டாளிகள் உள்ளனர் — டெல்லியின் சஃப்தர்ஜங் மருத்துவமனை, குஜராத் கேன்சர் சோசைட்டி, மும்பையின் டாடா மெமோரியல் மருத்துவமனை ஆகியவை அதில் சில. ஆனால் எங்கள் உண்மையான நாயகர்கள் நன்கொடையாளர்கள்தான் அவர்கள் தான் எங்கள் கனவை சமூகமாக எடுத்துச் செல்கிறார்கள் என்றார்.விக் பெற்றவர்கள் விழாவில் நன்றியுடன் பேசும்போது காட்டிய சந்தோஷத்தையும் நன்றியையும் பார்க்கும் போது நிறைய நன்கொடையாளர்கள உருவாகவேண்டும் என்ற எண்ணமே ஏற்பட்டது.இது ஒன்றும் சிரமமான விஷயம் அல்ல மனமிருந்தால் நீங்களும் உங்கள் முடியை அழகு இழக்காமல் அளவோடு தானம் செய்யலாம். எப்படி என்பதை அறிய கிழே உள்ள இணையத்தின் மூலம் தொடர்பு கொள்ளவும்.???? வலைத்தளம்: www.cherianfoundation.org-எல்.முருகராஜ்