உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / பொக்கிஷம் / தோனியின் மீதான மோகம் குறைகிறதா?

தோனியின் மீதான மோகம் குறைகிறதா?

சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் மேட்ச் நடக்கும் போது வரக்கூடிய பெருவாரியான கூட்டம் தோனியை பார்க்கவும் அவரது கீப்பிங் மற்றும் பேட்டிங்கை ரசிக்கவுமே என்பது பலரும் அறிந்த விஷயமே இது அவர்கள் அணிந்துவரும் தோனி பெயர் கொண்ட பனியனிலும் முகத்தில் வண்ணமயமாய் எழுதிக்கொள்ளும் 'எம்எஸ்டி' என்ற வார்த்தையிலும் நன்றாகவே வெளிப்படும்.ஆனால் முதல் மேட்சின் போது இருந்த அந்த தோனியின் மீதான மோகம் மூன்றாவதாக டில்லியுடன் நடந்த போட்டியின் போது காணப்படவில்லை என்பதே நிதர்சனம்,இதற்கு அவர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்பதே பிரதான காரணமாக இருக்கக்கூடும்.வெற்றி பெறும் நிலையில் அணி இருக்கும் போது பினிஷிங்காக சில ஷாட்டுகள் அடிப்பதே தோனியின் வழக்கம் ஆனால் கடந்த சில மேட்ச்களில் அவர் அணி சரிவில் இருக்கும் போது அடித்து விளையாடி மீட்க வேண்டிய நிலையில் களம் இறங்கினார் ஆனால் அடித்து விளையாடவில்லை அநேக பந்துகளை தட்டிவிடுகிறாரே தவிர அடிப்பது என்பது அபூர்வமாகே நிகழ்கிறது.டில்லி அணியுடன் விளையாடிய போட்டியும் அப்படித்தான் இருந்தது தோல்வியில் முடிந்தது.இதற்கு அவரை மட்டும் குறைகூற முடியாது எளிய கேட்சுகளை விட தவறவட்ட பீல்டிங்கில் சொதப்பிய அணி வீரர்களுக்கும் இந்த தோல்வியில் பங்கு உண்டு.இதன் காரணமாக சிங்கம் வேடம் தரித்தவர் மைதானத்தில் வலம்வரும் போது பெரிதாக உற்சாகக்குரல் எதுவும் எழவில்லை.எப்போதாவது ஐபிஎல் மேட்ச் பகலில் நடக்கும் இந்த மேட்சும் அப்படித்தான் நடந்தது.டேய் ரஜா பக்கத்துல இருக்கிற கடைக்கு ஒரு எட்டு போய் மருந்து வாங்கிட்டு வாடா என்றால் கூட அட போம்மா வெயில் அடிக்குது அப்புறம் பார்த்துக்கலாம் எனச்சொல்லும் 'அன்பு' மகன்கள் சுமார் நான்கு மணி நேரத்திற்கு மேல் வறுத்தெடுக்கும் வெயிலில் உட்கார்ந்து மேட்ச் பார்த்தனர்,கிரிக்கெட் மீது அவ்வளவு பாசம்.சென்னை அணியின் கேப்டன் ஒன்றுக்கு மூன்று கூலர்களை தொப்பியில் மாட்டியிருந்தும் ஒரு கூலரைக்கூட கண்ணில் மாட்டிக் கொள்ளாமல் பீல்டிங் செய்தார் அப்புறம் எதுக்கு அந்த கண்ணாடிகள் என்பது அவருக்கே வெளிச்சம்.-எல்.முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

KRISHNAN R
மே 07, 2025 10:46

ஊட்டு க்கு... போக சொல்லு


Natarajan Ramanathan
ஏப் 07, 2025 18:46

தோணி எப்போது G square க்கு எல்லாம் விளம்பரம் செய்ய ஆரம்பித்தாரோ அப்போதே அவரின் மீதான மோகம் வெகுவாக குறைந்துவிட்டது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை